(19)

(19)

வாயுள் வையகம் கண்ட மடநல்லார்

ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம்

பாய சீருடைப் பண்புடைப் பாலகன்

மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே.

பதவுரை

வாயுள்

–

(பிள்ளையின்) வாயினுள்ளே
வையகம்

–

உலகங்களை
கண்ட

–

ஸாக்ஷாத்கரித்த
நல் மடவார்

–

வைல்க்ஷண்யத்தையும் மடப்பத்தையுமுடைய
மாதர்

–

ஸ்த்ரீகளானவர்கள், (‘‘இவன்)
ஆயர் புத்திரன் அல்லன்

–

இடைப்பிள்ளை யல்லன்
அரு தெய்வம்

–

பெறுதற்கரிய தெய்வம்,
பாய சீர் உடை

–

பரம்பின புகழையுடையனும்
பண்பு உடை

–

குணங்களை யுடையனுமான
பாலகன்

–

(இந்த) சிறுப்பிள்ளையானவன்
மாயன்

–

ஆச்சர்யசக்தியுக்தன்’’
என்று

–

என்று (ஒருவர்க்கொருவர்) சொல்லிக்கொண்டு
மகிழ்ந்தனர்

–

ஆநந்தித்தார்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – கண்ணனுடைய வாயில் ஸகல லோகங்களையுங்கண்ட யசோதையானவள் ஆநந்தத்தாலே மற்றுமுள்ள பெண்டுகளையும் அழைத்துக்காட்ட, கண்ணபிரான் அவர்களுக்கும் அருள்கூர்ந்து அப்படியே காட்டிக்கொடுக்க, அப்பெண்களெல்லாரும் யசோதையைப் போலவே கண்ணன் வாயில் ஸகல லோகங்களையுங் கண்டு ஆச்சரியப்பட்டு, ‘இவன் ஸாமாந்யனான இடைப்பிள்ளையல்லன்; ஸாக்ஷாத் பரமபுருஷனே இப்படிவந்து அவதரித்தானாக வேணும்’ என்று கொண்டாடிக் கூறினார்கள்.

English Translation

When the other good ladies saw the Universe in his mouth, they exclaimed with glee, “this is no ordinary cowherd-child, but the blessed Lord himself, endowed with all the auspicious qualities”.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top