(11)

(11)

அல்வழக் கொன்றுமில் லாஅணி கோட்டியர் கோன்அபி மானதுங்கன்

செல்வனைப் போலத் திருமா லேநானும் உனக்குப் பழவடியேன்

நல்வகை யால்நமோ நாரா யணாவென்று நாமம் பலபரவி

பல்வகையாலும் பவித்திர னேஉன்னைப் பல்லாண்டு கூறுவனே.

 

பதவுரை

திருமாலே

ச்ரியபதியே!
அல் வழக்கு ஒன்றுமில்லா

அநீதிகள் ஒன்றுமில்லாமலிருக்கிற
அணிகோட்டியர் கோன்

அழகிய திருக்கோட்டியூரில் உள்ளவர்களுக்குத் தலைவரும்
அபிமாநம்துங்கன்

ஸ்ரீவைஷ்ணவாபிமாநத்தாற் சிறந்தவருமான
செல்வனைபோல

செல்வநம்பியைப் போலவே
நானும்

நானும்
உனக்கு

தேவரீருக்கு
பழ அடியேன்

பழமையான தாஸனாய்விட்டேன்
பல் வகையாலும் பவித்திரனே

எல்லாவிதங்களாலும் பரிசுத்தனான பெருமானே
நல் வகையால்

அடியேனுக்கு நன்மையுண்டாகும்படி
நமோ நாராயணா என்று

திருமந்திரத்தை அநுஸந்தித்து
பல நாமம் பரவி

(தேவரீருடைய) அனேக திருநாமங்களைச் சொல்லியேத்தி
உன்னை பல்லாண்டு கூறுவன்

தேவரீருக்கு மங்களாசாஸநம் பண்ணுவேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – ‘‘அண்டக்குலத்துக்கு’’ என்னும் பாசுரத்தாலே அழைக்கப்பட்டு ‘‘நெய்யெடை’’ என்னும் பாசுரத்தால் தாங்கள் திருந்தினபடியைச் சொல்லிக் கொண்டுவந்து ஐச்வர்யார்த்திகள் எம்பெருமானை நோக்கி மங்களாசாஸநம் பண்ணுகிறார்கள் இதில் ஐச்வர்யத்திகள் எண்ணிறந்தவர்கள் ஆகையாலே அவர்களுள் ஒருவன் சொல்லுகின்றனென்று ‘‘நெய்யெடை’’ என்கிற பாசுரத்தில் ‘‘கூறுவனே’’ என்று ஏகவசநப்ரயோகம் பண்ணினதுபோலவே இதிலும் கொள்வது.

அல்வழக்கு ஒன்றுமில்லா- தேஹமே ஆத்மாவென்று நினைப்பது, பகவானுக்கு சேஷமாய்ப் பரதந்த்ரமான ஆத்மாவை ஸ்வத்ந்த்ரமென்று நினைப்பது, தேவதாந்தரங்களைப் பரதெய்வமாக நினைப்பது, எம்பெருமானிடத்தில் க்ஷுத்ர பலன்களை அபேக்ஷிப்பது, மோக்ஷத்துக்காகவும் கருமம் ஞானம் முதலிய உபாயாந்தரங்களை அநுஷ்டிப்பது இவை முதலானவை அல்வழக்குகள் – அநியாயங்கள்; அவையில்லாதவரான செல்வநம்பி தேவரீர்க்கு எப்படி நித்யதாஸரோ அப்படி நாங்களும் நித்யதாஸராய்விட்டோம் என்கிறார்கள்.  ‘அணிகோட்டியர்கோன்’ என்கையாலே செல்வநம்பி திருக்கோட்டியூரில் அவதரித்தவர் என்று விளங்குகிறது.

இத்தனைநாள் வரையில் ஐச்வர்யத்தியாயிருந்து இன்று வந்து சேர்ந்தவன், ‘செல்வநம்பிக்கைப்போலே நானும் பழவடியேன்’ என்னாலாமோவென்னில், பாபத்தாலே வந்த அஹங்காரம் கழிந்துவிட்டால் எல்லா ஆத்மாக்களுக்கும் அடிமையே நிலைநிற்பதாகையால் அப்படிசொல்லக் குறை ஏன்? இப்போது நல்வகையால் என்றபடியால் இதுவரையில் இந்த ஐச்வர்யார்த்திகள் பகவந் நாமங்களைக் கெட்டவழியில் உபயோக்ப்படுத்தினார்களென்று ஏற்படுகின்றது.  கெட்டவழியாவது – பிரயோஜநாந்தரப்ரார்த்தகை.  இதுவரையில் தங்களுக்கிருந்த அசுத்திகளையெல்லாம் போக்கி சுத்தப்படுத்திச் சேர்த்துக்கொண்டபடியால் பல்வகையாலும் பவித்திரனே! என்கிறார்கள்.  அபிமானதுங்கன் – வடசொல் தொட.

 

English Translation

My Lord Tirumal!  Like the faultless chief of Kottiyur Selvanambi, a mountain of respectability, I am an old faithful servant of yours, Chanting Namo Narayanaya and other names in myriad ways with all my power, O Pure One, I sing Pallandu to you.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top