(907)
மழைக்கன்று வரைமு னேந்தும் மைந்தனே மதுர வாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு
உழைக்கின்றேற் கென்னை நோக்கா தொழிவதேஉன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்கமா நகரு ளானே.
பதவுரை
| அன்று |
– |
(இந்திரன் பசிக்கோபத்தாலே ஏழு நாள் விடா மழை பெய்வித்த) அக்காலத்திலே |
| முன் |
– |
(பசு முதலியவை மழையினால் கஷ்டமடைவதற்கு) முன்பாகவே |
| மழைக்கு |
– |
மழையைத் தடுப்பதற்காக |
| வரை ஏந்தும் மைந்தனே |
– |
கோவர்த்தன பர்வதத்தை (கையில் குடையாக) ஏந்தியமிடுக்கையுடையவனே! |
| மதுர ஆறே |
– |
இனிய ஆறுபோல் எல்லார்க்கும் விடாயைத் தீர்ப்பவனே! |
| உழை கன்றுபோலநோக்கம் உடையவர் |
– |
மான் குட்டியின் விழிபோன்ற விழியையுடைய மாதர்களின் |
| வலையுள் |
– |
(அந்த நோக்காகிற) வலையினுள்ளே |
| பட்டு |
– |
அகப்பட்டு |
| உழைக்கின்றேற்கு என்னை |
– |
துடிக்கிற என்னை |
| நோக்கா தொழிவதே |
– |
கடாக்ஷியாம லிருப்பதும் தகுதியோ? |
| ஆதி மூர்த்தி |
– |
முழுமுதற் கடவுளே! |
|
அரங்கமா நகருளானே!-; |
||
| உன்னை அன்றே |
– |
தேவரீரை நோக்கியன்றோ |
| அழைக்கின்றேன் |
– |
நான் கூப்பிடாநின்றேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பேறு பெறுவதில் விரைவு மிகுதியாலே ஆற்றாமை கரைபுரண்டு பெருமிடறுசெய்து கூப்பிடுகிறார். இந்திரன் பசிக்கோபத்தாலே ஏழுநாள் விடாமழை பெய்வித்து வருத்தப்படுத்தின காலத்தில் கோவர்த்தநகிரியைக் கொற்றக்குடையாக வெடுத்து ஆயரையும் ஆநிரையையும் காத்தருளினவனன்றோ நீ; அப்படி அவர்களைக் காப்பதற்கு அவர்களிடத்தில் ஏன்ன குணம் கண்டுபிடித்தாய்? அவ்விடையருடைய கோஷ்டியிலாவது பசுக்களின் திரளிலாவது அடியேனையும் சேர்த்துக்கொள்ளலாகாதா? என்னும் இரக்கப்பொருள்தோன்ற மழைக்கன்று வரைமுனேந்தும் மைந்தனே! என்கிறார்.
மதுர ஆறே! – ரக்ஷித்தருளாமல் உபேக்ஷித்தபோதிலும் உன்னைவிட முடியவில்லையே! என்பது கருத்து. ஆறானது ஏரி, குளம் முதலியவைபோலே ஒரிடத்திலேயே இராமல் நாநா தேசங்களிலும் போய்ப் பெருகுவது போல் எம்பெருமான் அடியார் இருக்குமிடங்களிலெல்லாம்போய் ஸேவை ஸாதிததருள்கின்ற ஸௌலப்யமும் இந்த முற்றுவமையால் தோற்று மென்க.
“உன்னையன்றே யழைக்கின்றேன்” என்றவாறே எம்பெருமான் “ஆழ்வீர்! நீர் அழைத்தவுடனே நான் ‘ஏன்?’ என்ன வேணுமோ? என்ன ஆவச்யகதை? என்று கேட்க, ஆதிமூர்த்தி என்கிறார் – இவ்வுலகம் உருமாய்ந்துகிடந்த காலத்திலே ஒருவருடைய அபேக்ஷையும் எதிர்பாராமல் இவற்றை உண்டாக்கின உனக்கு இவற்றின் ரக்ஷணம் அவச்ய கர்த்தவ்யமன்றோ என்கை.
English Translation
O Prince who lifted a mountain against the storm! O River of sweetness! I was caught in the net of fawn-eyed damsels and struggled. Is this fair on you not to take notice? I have none to call but you! O First Lord, Lord of Arangama-nagar!
