(902)

(902)

தவத்துளார் தம்மி லல்லேன் தனம்படத் தாரி லல்லேன்

உவர்த்தநீர் போல வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்

துவர்த்தசெவ் வாயி னார்க்கே துவக்கறத் துரிச னானேன்

அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே

பதவுரை

அரங்கமா நகருளானே!–;

தவத்துளார் தம்மில் அல்லேன்

–

தபஸ்ஸை அனுஷ்டித்தவர்களில்
தனம் படைத்தாரில் அல்லேன்

–

(ததீயாராதனம் முதலியவற்றுக்காகப்) பொருள் ஸம்பாதித்தவர்களிலும் சேர்ந்தவனல்லேன்;
என்றன் உற்றவர்க்கு

–

என்னைச் சேர்ந்தவர்களுக்கு
உவர்த்த நீர் போல

–

உப்புத் தண்ணீர்போல
ஒன்றும் அல்லேன்

–

ஒன்றுக்கும் உதவாதவனாயிரா நின்றேன்.
துவர்த்த செவ்வாயினார்க்கே

–

பழுப்பேறின அதரத்தையுடைய மாதர்கட்கும்
துவக்கு அற

–

ஸம்பந்தம் அற்றுப்போம்படி
துரிசன் ஆனேன்

–

கள்ளனாயினேன்

(இப்படிப்பட்ட எனக்கு)

பிறவி அவத்தமே தந்தாய்

–

ஐந்மத்தை வ்யர்த்தமாகவே கொடுத்தாய்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தவமாவது – சரீரத்தை வருத்தப்படுத்திச் செய்யும் காரியம்; முமுக்ஷுக்களாயிருப்பார் மோக்ஷார்த்தமாகத் தவம்புரிவர்கள்; புபுக்ஷுக்களாயிருப்பார் ஸ்வர்க்கம் முதலிய ப்ரயோஜ நாந்தரங்களைக் குறித்துத் தவம் புரிவார்கள்; நான் ஒருவிதமான தவமும் செய்திலேன்.

ஸத்விஷயத்திலே விநியோகப்படுகிற தனத்தை நான் படைக்கவில்லை என்கிறார்  ‘தனம் படைத்தாரிலல்லேன்’ என்பதனால்.  “பொருள் கையுண்டாய்ச் சொல்லக்காணில் போற்றி யென்றேற்றெழுவர்” (திருவாய்மொழி – கூ- க-ங) என்றபடி கையில் நாலுகாசு நடமாடுமளவு கழிந்தால் பந்துக்களும் நோக்கமாட்டார்களென்ற கருத்துடன் இரண்டாமடி அருளிச்செய்கிறார். உவர்த்த நீர் போல உப்புத் தண்ணீரை முகத்திலே இறட்டிக்கொண்டால் கண்விழிக்க வொண்ணுதபடி கரிக்குமாபோலே ஏன்னை அவர்கள் நேர்முகம் பார்க்கமுடியாதபடி அவர்கட்கு நான் தீயனாய்விட்டேனென்கை.

இப்பாசுரத்திற்கு உள்ளுறை பொருள் :- (தவத்துளார் இத்யாதி) உன்னுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்துக்கு விரோதியாக நான் ஒரு ஸ்வப்ரவ்ருத்தியும் செய்யவில்லை: கையில் காசுள்ளவனாயிருந்தேனாகில் ஆகிஞ்சந்யத்தில் குறையுடையேனாவேன்; அங்ஙனுமில்லை; அகிஞ்சநர்களில் தலைவனாயிராநின்றேன்.கொண்டபெண்டிர் மக்களுற்றார் சுற்றத்தவர் என்ற ஆபாஸபந்துக்களோடே போதுபோக்காநின்றேனாகில்  “சேலேய்கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத்தாய் தந்தையுமவரே யினியாவாரே” என்னும் நிலைவாய்ந்த பிறகு நாம் கைப்பற்றுவோமென்று நீ ஆறியிருக்கலாம்; அங்ஙனுமில்லை: பந்துக்களுக்கு என்னால் ஆகக் கூடிய நன்மை ஒன்றுமில்லாமையாலே அவர்கள் என்னை விட்டொழிந்தனர்; சேலேய்கண்ணி யரிடத்தும் நான் கள்ளனாய்ப் போந்தபடியாலே அவர்களும் என்னைத் துரத்திவிட்டனர். இனி உன்னுடைய விஷயீகாரம் இடையூறின்றி உள்புகுரலாமென்றவாறு. இந்த உள்ளுறை பொருளுக்கு நான்காமடியோடே ஸங்கதி எங்ஙனேயென்னில்: இப்படி உன் விஷயீகாரத்திற்கு நான் உசிதனுயிருக்கச்செய்தேயும் என்னை நீ உபேக்ஷிப்பதால் என்னை நீ வீணே படைத்தாயிறே என்கிறார். அவத்தம் -அவத்யம் என்ற வடசொல் விகாரம்.

English Translation

O Lord of Arangama-nagar! I am not among the wealthy ones. To my friends and well wishers I am as useless as sea water. For the red-lipped dames, I have become wicked and unreliable. Alas, you have given me a useless life indeed!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top