(847)

(847)

வரம்பிலாத மாயமாய வையமேழும் மெய்ம்மையே

வரம்பிலூழி யேத்திலும்வ ரம்பிலாத கீர்த்தியாய்

வரம்பிலாத பல்பிறப்ப றுத்துவந்து நின்கழல்

பொருந்துமாதி ருந்தநீவ ரஞ்செய்புண்ட ரீகனே.

பதவுரை

வரம்பு இலாத மாய

–

அளவிறந்த ஸ்வரூபத்தையுடைய பிரகிருதிதத்துவத்தை ஸ்வாதீகமாகவுடையவனே
மாய!

–

ஆச்சரியசக்தியுக்தனே!
வையம் எழும்

–

ஏழுலகத்திலுமுள்ள ஜனங்களும் (கூடி)
மெய்ம்மையே

–

மெய்யாகவே
வரம்பு இல் ஊழி

–

பலபல கற்பகங்கள் வரையிலும்
ஏத்திலும்

–

தோத்திரம் பண்ணினாலும்
வரம்பு இலாத கீர்த்தியாய்

–

எல்லைகாண முடியாத புகழையுடையோனே!
புண்டரீகனே

–

புண்டரீகாக்ஷனே! (அடியேன்)
வரம்பு இலாயா

–

முடிவில்லாமல் நேரக்கூடியவனான
பல் பிறப்பு

–

பற்பல ஜன்மங்களை
அறுத்து

–

இன்றோடு முடித்துவிட்டு
நின் கழல் வந்து

–

உனது திருவடிகளைக் கிட்டி
பொருந்தும் ஆ

–

அவற்றிலேயே ஸக்தனாயிருக்கும்படி
திருந்த

–

நன்றாக
நீ வரம் செய்

–

அநுக்ரஹித்தருள வேணும்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  “அஞ்சலென்னவேண்டுமே” என்றும் “இரங்கு அரங்கவாணனே!” என்றும் பொதுப்பட அருளிச்செய்ததை விவரியாநின்றுகொண்டு, “ஸம்ஸாரத்தை வேரறுத்து உன் திருவடிகளிலே பொருந்தும்படியாக அநுக்ரஹம் பண்ணியருளவேணும்” என்று தம்முடைய ப்ராப்யத்தை ஸ்பஷ்டமாகப் பிரார்த்திக்கிறார்.

English Translation

O Wonder-Lord of endless feats, O Lord in all, above, below! O Lord of endless ages praised in yore! Cutting the pall of endless birth, O Lotus-Lord do take to me, and bind me to your holy feet, I pray to you for this alone.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top