(821)

(821)

குந்தமோடு சூலம்வேல்கள் தோமரங்கள் தண்டுவாள்

பந்தமான தேவர்கள்ப ரந்துவான கம்முற

வந்தவாண னீரைஞ்ஞூறு தோள்களைத்து ணித்தநாள்

அந்தவந்த வாகுலம மரரேயறிவரே

பதவுரை

குந்தமோடு குலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள்

–

ஈட்டிகளென்ன சூலங்களென்ன வேலாயுதங்களென்ன இருப்புலக்கைகளென்ன கதைகளென்ன வாள்களென்ன (இவற்றோடு கூட)
பந்தம் ஆன தேவர்கள்

–

கூட்டங் கூட்டமாயிருந்த ருத்ராதிதேவதைகள்
பரந்து

–

(பல திக்குகளிலும்) சிதறிப் போய்
வானகம் உற

–

தங்கள் தங்களிருப்பிடமான மேலுலகங்களிற் சென்றுசேர
வந்த வாணன்

–

(பிறகு தோள்களை வீசிக்கொண்டு) எதிர்த்து வந்த பாணாஸுரனுடைய
ஈர் ஐநூறு தோள்களை

–

ஆயிரந்தோள்களை
துணிந்த நாள்

–

அறுத்துத் தள்ளினபோது (அத்தெய்வங்ள்)
அந்த அந்த அகுலம்

–

வாயாற்சொல்ல முடியாதபடி வியாகுலப்பட்டமையை
அமரரே அறிவர்

–

(நாம் அறியோம்;) அத் தெய்வங்கள் தாமே அறிவர். (அவர்களையே கேட்டுக் கொள்வது.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “வரந்தரமிடுக்கிலாததேவர்” என்று கீழ்ப்பாட்டிற் கூறியதைக்கேட்ட சிலர், ‘இப்படிச் சொல்லலாமோ? அவர்களுக்கு சக்தி இல்லையோ? அவர்களை ஆச்ரயித்து இஷ்ட ஸிக்தி பெற்றவர்கள் பலபேர்களில்லையோ?” என்ன; ருத்ரனை யாச்ரயித்து அவனுக்கு தந்தரங்கனாயிருந்த பாணாஸுரன் பட்டபாடும், அந்த ருத்ரன் தானும் கண்கலங்கினபடியும் அப்போது உடன்பட்ட தேவர்கட்கே தெரியுமத்தனையென்கிறார்.

பந்தமான தேவர்கள் = பந்தமாவது ஸம்பந்தம்; ருத்ரனோடு ஸம்பந்தமுடையவர்களான ஷûப்ரஹ்மண்யன் முதலான தேவதைகள் என்றபடி வாணனுக்கு உறவான ருத்ராதிகள் என்றுமாம். இங்ஙனன்றிக்கே, “குந்தமோடு சூலம் வேற்கள் தோடரங்கள் தண்டுவாள் பந்தமான” என்று சேர்த்து அந்வயிக்கவுமாம்; குந்தம் முதலான ஆயுதங்கள் காற்கட்டாகப் பெற்ற தேவர்கள் என்றதாகிறது. ரக்ஷகமாக வேண்டிய ஆயுதங்கள் காற்கட்டானபடி; இராவணனுக்குப்போல.

English Translation

The godlings wielding lancet, axe, trident, spear and dagger, club, ran away from battle scene and sought refuge in sky above. The thousand-handed Bana had to lose his arms and shoulders then. The havoc that the discus played, — the gods above were witness to!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top