(758)

(758)

ஒன்றிரண்டு மூர்த்தியா யுறக்கமோடு ணர்ச்சியாய்

ஒன்றிரண்டு காலமாகி வேலைஞால மாயினாய்

ஒன்றிரண்டு தீயுமாகி யாயனாய மாயனே

ஒன்றிரண்டு கண்ணினானு முன்னையேத்த வல்லனே

பதவுரை

ஒன்று இணர்டு மூர்த்தி ஆய்

–

ப்ரதாநமான ஒரு மூர்த்தியும் அப்ரதாநமான இரண்டு மூர்த்தியுமாய்
உறக்கமோடு உணர்ச்சி ஆய்

–

அஜ்ஞாநத்துக்கும் ஸத்ஜ்ஞானத்துக்கும் நியாமகனாய்
ஒன்று இரண்டு காலம் ஆகி

–

மூன்று காலங்களுக்கும் நிர்வாஹனாய்
வேலை ஞாம் ஆயினாய்

–

கடல்சூழ்ந்த பூமண்டலத்துக்கு ப்ரவத்தகனாய்
ஒன்று இரண்டு தீயும் ஆகி

–

மூன்று அக்நிகளுக்கும் நிர்வாஹனாய்
ஆயன் ஆய

–

கோபாலஸஜாதீயனாய் அவதரித்த
மாயனே!

–

ஆச்சர்யபூதனான எம்பெருமானே!
ஒன்று இரண்டு கண்ணினாலும்

–

முக்கண்ணனான சிவபிரானும்
உன்னை

–

உன்னை
ஏந்த வல்லனே

–

துதிக்க வல்லவனே!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ப்ரஹ்ருத்ராதிகளைச் சரீரமாகக்கொண்டு அவர்களுக்கு நியாமகனாய் என்கிறது முதலடைமொழி. “முனிபெ நான்முகனே முக்கண்ணப்பா” இத்யாதிகளிற்போல இங்கும் ஸாமாநாதிகரண்யம் சரீர சரீர பாவத்தைப் பற்றியதாம். உறக்கமோடு உணர்ச்சியாய்= இலக்கணையால் அஜ்ஞானத்தை உறக்கமென்கிறது. ஞானமற்றவனுக்கு உறக்கம் தவிர வேறு தொழிலிலாமை அறியத்தக்கது. அஜ்ஞாகம், அந்யதாஜ்ஞாநம், விபரீதஜ்ஞாகம், ஸம்சயம், மறப்பு இவையெல்லாம் உறக்கமேயாம். உறக்கத்துக்கும் உணர்ச்சிக்கும் எம் பெருமான் நிர்வாஹகனாகையாவ தென்னென்னில்; தன் ஸ்வரூப யாதாத்மியத்தைச் சிலர்க்கு உள்ளபடி ஸக்ஷாத்கரிக்கச் செய்பவனும் தானே; த்ரிமூர்த்திஸாம்ய வ்யாமேஹாதிகளாலே சிலரை மயங்குபவனும்தானே என்கை. ஒன்றிரண்டு காலமாகி = இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்  என்று மூன்று காலங்களுக்கும் நிர்வாஹகன் என்பது ஸாமாந்யமான அர்த்தம். ஸத்வகுணம் மிகும்படியான ஸாத்விககாலத்துக்கும், ரஜோகுணம் மிகும்படியான ராஜஸ காலத்துக்கும், தமோகுணம் மிகும்படியான தாமஸகாலத்துக்கும் கடவன் என்கை விசேஷார்த்தம்.

ஒன்றிரண்டு தீ = ஆஹவநீயம், கார்ஹத்யம், தஹிணாக்கி என்பவை. ஏத்தவல்லனே என்றது- ஏத்தவல்லவனல்லன் என்றபடி.    (எ)

English Translation

You became the One and Two, then you became the sleep and sense. O You became the past, present and future in the Ocean-Earth. You became the three fires and took a birth in Gokulam. Words of praise do fail for even Lord Siva who has three eyes.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top