(754)

(754)

ஐந்துமைந்து மைந்துமாகி யல்லவற்று ளாயுமாய்

ஐந்துமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனே

ஐந்துமைந்து மைந்துமாகி யந்தரத்த ணைந்துநின்று

ஐந்துமைந்து மாயநின்னை யாவர்காண வல்லரே.

பதவுரை

ஐந்தும்

–

ஆகாசாதி பூதங்கள் ஐந்தும்
ஐந்தும்

–

ஜ்ஞாநேந்திரியங்கள் ஐந்தும்
ஐந்தும்

–

கருமேந்திரியங்கள் ஐந்தும்
ஐந்தும்

–

தந்மாத்ரைகள் ஐந்தும்
மூன்றும்

–

ப்ரக்ருதி, மஹாந், அஹங்காரம் என்ற மூன்றும்
ஒன்றும்

–

மநஸ்ஸாகிய ஒன்றும்
ஆகி

–

(ஆக இப்படிப்பட்ட இருபத்தினாலு தத்துவங்கட்கு) நிர்வாஹகனாய்
அல்ல வற்றுளாயும் ஆய் நின்ற

–

கீழ்ச்சொல்லப்பட்ட அசித்துப் போலன்றியே சேதநராயுள்ளவர்கட்கும் அந்தர்யாமியாய் எழுந்தருளியிருக்கிற
ஆதிதேவனே!

–

முழு முதற்கடவுளே!
அந்தரத்து அணைந்து! நின்று

–

பரமபதத்திலே பொருந்தி நின்று
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி

–

அப்ராக்ருத பஞ்சசக்திகளுக்கும் ஜ்ஞாநேதிரியங்களைந்துக்கும், கருமேந்திரியங்களைந்துக்கும் நிர்வாஹகனாய்
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை

–

சப்தாதிபோக்யங்களைந்துமாய், போகஸ்தாகம், போகோபகரணம், வைகுந்தத்தமர் முனிவர் முக்தர் என்ற ஐந்து வகுப்புகட்கு நியாமகனுமா யெழுந்தருளியிருக்கிற உன்னை.
யாவர் காண வல்லர்

–

யார் அறியவல்லர்? (யாருமறியகில்லார்.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – லீலாவிபூதிவிசிஷ்டனாயும் நித்யவிபூதிவிசிஷ்டனாயும் நீ எழுந்தருளியிருக்குமிருப்பை நிர்ஹேதுகக்ருபையாலே எனக்கு நீ காட்டியருள நான் எளிதிற்கண்டாப்போல் ஸ்வஸரமர்த்தியத்தாற் காணக்கூடியவர்கள் யாருமில்லை யென்கிறார். முன்னிரண்டடிகளால் லீலாவிபூதியோகமும், பின்னிரண்டடிகளால் நித்யவிபூதியோகமும் அருளிச்செய்யப்படுகின்றன. முதலடியில், ஐந்தும்- ப்ருதிவி. அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் (நிலம் நீர் தீ கால்விசும்பு) என்ற பஞ்சபூதங்கள். ஐந்தும் = த்வக்கு, சக்ஷûஸ், ச்ரோத்ரம், ஜிஹ்வா, க்ராணம் (செவ் வாய் கண் மூக்கு உடல்) என்ற பஞ்சஜ்ஞாநேந்திரியங்கள். ஐந்தும்- வாக்கு’ பாணி, பரதம், பாயு, உபஸ்தம் (வாய்,கை, கால், குதம்,குறி)என்ற பஞ்சகர்மேந்திரியங்கள். இரண்டாமடியில், ஐந்தும் = சப்ததந்மாத்ரை, ஸ்பர்சதந்மாத்ரை,ரூபதந்தமாதரை, ரஸதந்மாத்ரை, கந்ததந்மாத்ரை என்னும் பஞ்சதந்மாத்ரைகள்.

மூன்றும் = அலிபக்ததமஸ்ளென்றும் அக்ஷரமென்றும் சில அவஸ்தைகளை யுடைந்தாயிருக்கிற ப்ரக்ருதி (1), அந்தப்ரக்ருதியில் நின்றும் குணவைஷம்யமடியாகப் பிறக்கிற விகாரங்களுள் முதலதான மஹாக் (2), அந்த மஹத்தத்வத்தில் நின்றும் பிறக்கிற அஹங்காரம் (3), ஆக மூன்று, ஒன்று- மநஸ்ஸு. ஆக இருபத்தினாலு தத்துவங்கள் சொல்லப்பட்டன. (முதலடியில் பதினைந்து; இரண்டாமடியில் ஒன்பது, ஆக-24.) ஆகிநின்ற என்ற ஸாமாநாதிகரண்யம்- இத் தத்துவங்களுக்கும் எம்பெருமானுக்குமுள்ள ஸம்பந்தங்களெல்லாவற்றையும் உளப்படுத்தியதாம். அல்லவற்றுளாயுமாய்- இப்படி இருபத்தினாலாக வகுக்கப்பட்ட ப்ரக்ருதியிலே ஸம்ஸ்ருஷ்டரான ஜீவாத்மாக்களுக்கு அந்தர்யாமியாய் என்றபடி, அல்லாவை என்றால் ஜீவாத்மாக்களை எங்ஙனே குறிக்கும்படியென்னில்; அல்லவை என்பதற்கு ‘அப்படியாகாதவை’ என்று பொருள். ப்ரகரணாநுகுணமாக ‘அசித்தாகாதவை’ என்று பொருளாய் அசேக்நவ்யாவ்ருத்தரான சேதநர்களைக் குறிக்கிறபடி.

இனி பின்னடிகளில், திவ்யமங்களவிக்ரஹத்தையும் நித்யவிபூதியோகத்தையும் தமக்குக் காட்டித்தந்தருளினபடியை அருளிச்செய்கிறா. (1) ஐந்தும் = *** ***  பஞ்சசக்திகளாவன – “*** ***  என்று சொல்லப்படுகிறவையாய் நித்யவிபூதியிலுள்ளவையான பஞ்சபூதங்கள். வாஸுதேவனுடைய திவ்யமங்களவிக்ரஹம் பஞ்ச சத்திமயமென்று வேதாந்த நூற்கொள்கை. ஐந்தும், ஐந்தும், ஐந்தும் – அப்ராக்ருதங்களான ஜ்ஞாநேந்திரியங்கனைந்தும், கருமேந்திரியங்களைந்தும், சப்தாதி போக்யங்களைந்தும். ஐந்தும் = ***  நங்களென்ற வகுப்பு (1), ஜொஹொவதுரணங்களென்ற வகுப்பு (2), “வைகுந்தத்தமரரும் முனிவரும்” என்ற இரண்டு வகுப்புகள் (4), முக்தர் என்ற வகுப்பு (50)- அக ஐந்து கோடிகள். அந்தரம் = ஆகாசம்; பரமாகாசமெனப்படுகிற பரமபதம்.  (ங)

English Translation

You became the Five, the Five, the Five in all, the indweller. The Five and Three, the wonder-Lord, the origin of all that is; Then the Five, you stand in high Heaven above. The Five, the Five that you became, who can solve the mystery?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top