(751)
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை
எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற் றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே.
பதவுரை
|
தில்லைநகர் திரு சித்ரகூடம் தன்னுள் |
||
| திறல் விளங்கும் |
– |
பல பராக்கிரமம் விளங்கப் பெற்ற |
| மாருதியோடு |
– |
அனுமானுடனே |
| அமர்ந்தான் தன்னை |
– |
நித்யவாஸம் பண்ணுகிற எம் பெருமானைக் குறித்து |
| எல்லை இல்சீர் தயரதன் தன் மகன் ஆய் தோன்றிற்று அது முதல் ஆ தன் உலகம் புக்கது ஈறு ஆ |
– |
அழிவில்லாத புகழையுடைய தசரதசக்ரவர்த்தியின் குமாரனாய் பிறந்தது முதல் பரமபதம் புக்கது இறுதியாக (ஸ்ரீராமாயணத்தை முழுதையும் ஸங்க்ரஹமாக அமைத்து) |
| கொல் இயலும் படை தானை கொற்றம் ஒள்வாள் கோழியர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த |
– |
(பகைவர்களைக்) கொல்லுதல் பொருந்திய ஆயுதங்களுடைய சேனையையும் வெற்றியையும் ஒளியையுமுடைய வாளாயுதத்தையுடைய வரும் உறையூரிலுள்ளார்க்குத் தலைவரும் வெண் கொற்றக்குடையை யுடையவருமான குலசேகராழ்வார் அருளிச்செய்த |
| நல் இயல் |
– |
சிறந்த இயற்றமிழிலக் கணத்துக்கு இசைந்த |
| இன் தமிழ் மாலை பத்தும் |
– |
இனியதமிழ்ப் பிரபந்த ரூபமான இப்பத்துப் பாசுரங்களையும் |
| வல்லார் |
– |
கற்று வல்லவர்கள் |
| நலம் திகழ |
– |
பரமபதத்தில் விளங்குகிற |
| நாரணன் |
– |
ஸ்ரீமந்த நாராயணனுடைய |
| அடிகீழ் நண்ணுவார் |
– |
திருவடிகளிற் சேரப் பெறுவார்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தில்லைத் திருச்சித்ரக்கூடத் தெம்பெருமான் விஷயமாக ஸ்ரீகுலசேகராழ்வார் அருளிச்செய்த பரமபோக்யமான இத்திருமொழியை ஒதவல்லவர்கள் எம்பெருமானருளாற் பரமபதமடைவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டினராயிற்று. பால்யத்தில் ப்ரஹ்மா அளித்த வரத்தினால் சிரஞ்சீவினவரும், ????????????? ????????????? ????????? ??????????? ?????????
(அதிமாநுஷஸ்தவம்.)
என்றபடி – ஸ்ரீராமகதை உலகத்திலுள்ளவளவும் தாம் ஜீவித்திருக்குமாறு ஸ்ரீராமனிடம் வரம்வேண்டிப் பெற்றவருமான திருவடி, இராமபிரான் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளிய பொழுது அவனைவிட்டு பிரியமாட்டாது மனமிரங்க அந்த உத்தம பக்த சிகாமணியை தானும் விடமாட்டாமல் ஸ்ரீராமன் அவருடனே சித்ரகூடத்தில் வந்து வீற்றிருக்கின்றனனாம்.
English Translation
This decad of sweet Tamil songs by well-armed well-protected Kulasekara, Commander and King of Uraiyur, set in the good style of Sopanam, sings of the Lord who resides in Tillainagar Tiruchitrakutam with his strong aide Maruti, beginning with his Avatar as Dasaratha’s son until his return to the glorious abode. Those who master it will attain the blessed feet of Narayana.
