(739)

(739)

தேன்நகுமா மலர்க்கூந்தல் கெளசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ

கூனுருவில் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட கொடியவள்தன் சொற்கொண்டு இன்று

கானகமே மிகவிரும்பி நீதுறந்த வளநகரைத் துறந்து நானும்

வானகமே மிகவிரும்பிப் போகின்றேன் மனுகுலத்தார் தங்கள் கோவே.

பதவுரை

மனுகுலத்தார் தங்கள் கோவே

–

மநுகுலத்திற் பிறந்த அரசர்களிற் சிறந்தவனே!
தேன் நகு மா மலர் கூந்தல்

–

தேனைப் புறப்பட விடுகிற சிறந்த மலர்களைச் சூடிய கூந்தலையுடைய
கௌசலையும்

–

கௌஸல்யையும்
சுமித்திரையும்

–

ஸுமித்ரையும்
சிந்தை நோவ

–

மனம் வருந்த
கூன் உருவின் கொடும் தொழுத்தை சொல்கேட்ட கொடியவள்தன்சொல் கொண்டு

–

வக்ரமான வடிவம் போலவே மனமுங் கோணலாகப் பெற்ற வேலைக்காரியான கூனியினது வார்த்தையைக் கேட்ட கொடியவளான கைகேயியின் சொல்லை ஏற்றுக்கொண்டு
கானகமே மிக விரும்பி இன்று நீ துறந்த

–

காட்டையே மிகவும் விரும்பி இப்பொழுது நீ கைவிட்ட
வளம் நகரை

–

(உன்பட்டாபிஷேகத்தின் பொருட்டு) அலங்கரிக்கப் பட்டிருக்கிற இந்நகரத்தை
நானும் துறந்து

–

நானும் விட்டிட்டு
வானகமே மிக விரும்பி போகின்றேன்

–

மேலுலகத்தையே மிகவும் விரும்பி (அவ்விடத்திற்குச்) செல்கின்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மூன்று தாய்மார்களில் இரண்டுபேர் வருந்தவும் ஒருத்தி மகிழவும் நீ அயோத்தியை துறந்து கானகஞ் சென்றாயாதலின், நானும் இவ்வயோத்தியை துறந்து மேலுலகை நோக்கிச்  செல்லுகின்றே னென்கிறான். கூனுருவின் = இன் – ஐந்தனுருபு ஒப்புப்பொருள். கொடுமை- தீமையேயன்றி வளைவுமாதலை கொடுங்கோல் கொடுமரம் என்ற இடங்களிலுங் காண்க. தொழுத்தை தொழும்பன என்பதன் பெண்பால். மநு-ஸூர்யனது குமாரன்; வைவஸ்வதமநு.

English Translation

O King of all mankind! Listening to the words of the cruel Kaikeyi, ill-advised by the notorious hunchback maid, you gladly went into the forest leaving the flower-coiffured Kousalya and Sumitra in grief. Today, I too leave this city you renounced, and gladly enter my abode in heaven.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top