(717)

(717)

வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி வரண்டு நார்நரம் பெழக்கரிந் துக்க

நஞ்ச மார்தரு சுழிமுலை யந்தோ சுவைத்து நீயருள் செய்து வளர்ந்தாய்

கஞ்சன் நாள்கவர் கருமுகி லெந்தாய் கடைப்பட் டேன்வெறி தேமுலை சுமந்து

தஞ்ச மேலொன்றி லேனுய்ந்தி ருந்தேன் தக்க தேநல்ல தாயைப்பெற் றாயே


பதவுரை

வஞ்சம் மேவிய நெஞ்சு உடை பேய்ச்சி

வஞ்சனை பொருந்திய நெஞ்சையுடையளான பூதனையானவள்
வரண்டு

உடம்பு சோஷித்து
எழ

(உள்ளுள்ள ரத்தமாம்ஸங்கள) வெளியிற் கொழிக்கும்படியாகவும்
நார்நரம்பு கரிந்து உக்க

நார்போன்ற நரம்புகள் கருகி உதிரும்படியாகவும (அவளுடைய)
நஞ்சம் ஆர்தருசுழி முலை

விஷந்தீற்றிய கள்ள முலையை
நீ சுவைத்து

நீ ஆஸ்வாதநம் பண்ணியும்
அருள்செய்து

(என் மேல்) கிருபையினாலே
வளர்ந்தாய்

உயிருடன் வளரப்பெற்றாய்
அந்தோ

ஆச்சரியம்!
கஞ்சன் நாள் கவர்

கம்ஸனுடைய ஆயுஸ்ஸை அபஹரித்த
கரு முகில் எந்தாய்

காளமேகம் போன்ற நாயனே!
முலை வெறிதே சுமந்து

(நான்) முலையை வியர்த்தமாகச் சுமந்து
கடைப்பட்டேன்

கெட்டவரிலும் கடைகெட்டவளானேன்;
தஞ்சம் ஒன்று இலேன்

(உன்னையொழிய வேற) புகலற்றிராநின்றேன்;
உய்ந்திருந்தேன்

(என்றைக்காகிலு முன்னைக் கண்ணால் காண்போமென்று)பிராணனைப் பிடித்துக்கொண்டு ஜீவிக்கிறேன்;
தக்கது

உனக்குத் தகுதியான
நல்ல தாயை

நல்ல தாயாரை
பெற்றாய்

ஸம்பாதித்துக் கொண்டாய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – (கடைப்பட்டேன் வெறிதே முலைசுமந்து) முலை நெறித்தபோது பாலுண்பதற்கு உன்னைப் பிள்ளையாகப் பெற்றுவைத்தும் நீ வேறு முலையைத்தேடி ஓடினமையால் என்முலை பயனற்றொழிகையாலே இம்முலை எனக்குப் புரைகுழல் போலே வீணாண சுமையாயிற்றென்கிறாள். (தஞ்சமேல் இத்யாதி) நான் முன்னமே உயிர்துறந்திருக்க வேண்டுமாயினும் எப்போதாயினும் உன்னைக் காணப்பெறவேணுமென்னுமாசையால் பிராணனை வலியப்பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறேனென்று கருத்து. (தக்கதே இத்யாதி) உனக்கு முலைப்பால் வேண்டும்போது என்னையும் விட்டு யசோதையையும் விட்டுப் பூதனையைப் பற்றினாயே! இதுனோ தகுதி? என்றவாறு

English Translation

As you sucked her poisoned breasts, the ogress with deceit in her heart shriveled her veins and bones popped out. O Dark cloud-hued Lord, you grew up counting Kamsa’s days. Alas, carrying these useless breasts, I have become the lowliest, with no hope of redemption; barely surviving. What a good mother you have got!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top