(702)

(702)

மின்னொத்த நுண்ணிடை யாளைக்கொண்டு வீங்கிருள் வாயென்றன் வீதியூடே

பொன்னொத்த வாடைகுக் கூடலிட்டுப் போகின்ற போதுநான் கண்டுநின்றேன்

கண்ணுற் றவளைநீ கண்ணாலிட்டுக் கைவிளிக் கின்றதும் கண்டேநின்றேன்

என்னுக் கவளைவிட் டிங்குவந்தாய் இன்னமங் கேநட நம்பிநீயே

பதவுரை

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு

–

மின்னல் போன்று ஸூக்ஷ்மமான இடையையுடைய ஒரு பெண்ணை அணைத்துக் கொண்டு
வீங்கு இருள்வாய்

–

நிபிடமான (மிக்க) இருள் வேளையிலே
பொன் ஒத்த ஆடை

–

பீதாம்பரத்தாலே
குக்கூடல் இட்டு

–

முட்டாக்கிட்டுக் கொண்டு
என்தன் வீதி ஊடே

–

என் வீதி வழியே
போகின்ற போது

–

(அவளும் நீயுமாகப்) போகும் போது
நான் கண்டு நின்றேன்

–

நான் பார்த்துக் கொண்டிருந்தேன்:

(அன்றியும்:) நீ

கண்ணுற்றவளை

–

கண்ணில் தென்பட்ட (வேறொருத்தியை)
கண்ணால் இட்டு

–

(உனக்கே அற்றுத் தீரும்படி ) கடாக்ஷித்து
கை விளிக்கின்றதும்

–

(இன்னவிடத்தே வாவென்று) கையாலே அழைத்து ஸம்ஜ்ஞை பண்ணினதையும்
கண்டே நின்றேன்

–

பார்த்துக் கொண்டுதானிருந்தேன்;
அவளை விட்டு

–

அந்தப் பெண்மணியை விட்டு
இங்கு

–

என்னிடத்திற்கு
என்னுக்கு வந்தாய்

–

ஏதுக்காக வந்தாய்!
நம்பி

–

ஸ்வாமிந்!
இன்னம் அங்கே நட

–

இனிமேலும் நீ அவர்களிடத்திற்கே நடப்பாயாக.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வேறொருத்தியின் பாசுரம் இது.  நள்ளிருளில் ஒருவர்க்குந் தெரியாமல் போக வேணுமென்று போகிறவன் இருளன்னமாமேனியைத் திறந்து கொண்டே போகலாம்;  அல்லது கறுத்ததோர் ஆடையைப் போர்த்துக் கொண்டு போகலாம்.  நீயோ இருளை அகற்றிப் பளபளவென்று ப்ராகாசிக்கும் படியான பீதாம்பரத்தை முட்டாக்கிட்டுக் கொண்டு போனாய்;  போவதுதானும் வேறு வழியாயோ! நான் கண்டு  வயிறெரிய வேணுமென்றே என் தெருவழியே போனாய், என்ற கருத்துக்களை விரித்துக் கொள்க ( குக்கூடல் –  முட்டாக்கு )

English Translation

I saw you go as you made through the street in the cover of darkness with your arm over the shoulders of a thin-waisted dame, both covered over head with your yellow upper-cloth. Seeing another dame, you spoke to her with your eyes and made signs with your hand. I saw that also. Now, you leave her too and come here. What for? Continue going that way, O Complete Lord!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top