(698)

(698)

ஏர்மலர்ப் பூங்குழ லாயர்மாதர் எனைப்பல ருள்ளவிவ் வூரில்உன்றன்

மார்வு தழுவுதற் காசையின்மை அறிந்தறிந் தேயுன்றன் பொய்யைக்கேட்டு

கூர்மழை போல்பனிக் கூதலெய்திக் கூசி நடுங்கி யமுனையாற்றில்

வார்மணற் குன்றில் புலரநின்றேன் வாசுதே வாஉன் வரவுபார்த்தே

பதவுரை

வாசுதேவா

கண்ணபிரானே!
ஏர் மலர் பூ குழல் ஆயர்மாதர்

அழகிய புஷ்பங்களை அணிந்த பரிமளம் மிக்க கூந்தலையுடைய  இடைப் பெண்கள்
எனை பலர்  உள்ள

எத்தனையோ பேர்களிருக்கப் பெற்ற
இ ஊரில்

இந்தத் திருவாய்ப்பாடியில்
உன்தன் மார்வு தழுவுதற்கு

உன்னுடைய மார்வோடு அணைவதற்கு
ஆசை இன்மை அறிந்து அறிந்தே

ஆசையில்லாமையை நன்றாக அறிந்து வைத்தும்
உன்தன்

உன்னுடைய
பொய்யை கேட்டு

பொய்யான வார்த்தைகளைக் கேட்டு

(அவற்றை மெய்யென மயங்கி)

கூர் மழை போல் பனிக்கு ஊதல் எய்தி

மிக்க மழை போல் பெய்கிற பனியாலுண்டான     குளிரிலே அகப்பட்டு
கூசி

(யார் பார்த்து விடுகிறார்களோவென்று) கூச்சமடைந்து
நடுங்கி

நடுங்கிக் கொண்டு
யமுனை ஆற்றில்

யமுநா நதியில்
வார் மணல் குன்றில்

பெரியதொரு மணற் குன்றிலே
உன் வரவு பார்த்து

உன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு
புலர நின்றேன்

போது விடியுமளவும் (அங்கேயே) காத்து நின்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான் ஒரு பெண் பிள்ளையை நோக்கி ‘நீ யமுனையாற்றின் மணற்குன்றிலே போய் நில்லு, நான் அங்கே வருகிறேன்’ என்று சொல்லி விட, அப்படியே அவள் அங்கே போய் விடியுமளவும் நின்று அவன் வரக்காணாமல் வருத்தத்தொடு மீண்டு வந்து, மற்றொரு நாள் அவனைக் கண்ட போது ப்ரணய ரோஷந் தோற்றச் சொல்லுகிற பாசுரமாயிருக்கிறது இப்பாட்டு. அநியாயமாய் உன் பொய்யைக் கேட்டு மோசம் போனே னென்கிறான் ( வாசு தேவா !) கனவிலும் பொய் சொல்லியறியாத வஸுதேவர் வயிற்றிற் பிறந்த நீயும் தந்தையை ஒத்திருப்பாயென்று நம்பிக் கேட்டேன் காண்! என்ற குறிப்பு – புலர்தல் – பொழுது விடிதல்.

English Translation

O Vasudeva! With so many coiffured cowherd-dames living in this town, I knew full well not to nurture de-sires for the embrace of your chest. Still like a fool, I heard your lies and waited for you on the sands of the Yamuna all night, shivering in the frost and pierced by the wind.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top