(673)

(673)

எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன்

உம்பர் வாழ்வையொன் றாக கருதிலன்

தம்பி ரானம ரர்க்குஅரங் கநகர்

எம்பி ரானுக்கெ ழுமையும் பித்தனே

பதவுரை

எம் பரத்தர் அல்லா ரொடும்

என்னைப்போலே அநந்ய ப்ரயோஜநரா யிராதவர்களோடு;
கூடலன்

(நான்) கூடமாட்டேன்;
உம்பர் வாழ்வை

தேவதைகளின் ஸ்வர்க்கம் முதலிய போகங்களையும்
ஒன்று ஆக

ஒரு புருஷார்த்தமாக
கருதலன்

எண்ணமாட்டேன்;
அமரர்க்கு

நிதயஸூரிகளுக்கு
தம்பிரான்

ஸ்வாமியாய்
அரங்கம் நகர்

கோயிலிலே எழுந்தருளியிருக்கிற
எம்பிரானுக்கு

பெரிய பெருமாள் விஷயத்தில்
ஏழுமையும்

எப்போதும்
பித்தன்

பித்தனாகா நின்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸம்ஸாரத்தில் வெறுப்பும் கைங்கரியத்தில் விருப்பும் இல்லையாகில் ப்ரஹ்மாதிகளின் ஸம்பத்தேயாகிலும் அதை நான் க்ருணமாகவே நினைப்பேன்; நித்யஸூரிகளெல்லாம் அநுபவிக்குமாபோலே ஸம்ஸாரிகளும் இழவாமல் அநுபவிக்கும்படி கோயிலிலே வந்து ஸூலபராகக் கண்வளர்ந்தருளுமவருடைய இந்த நீர்மையை நினைத்து ‘இது எத்திறம்!’ என்று மோஹிப்பதே எனக்குத் தொழிலாயிருக்கு மென்கிறார்.

English Translation

I neither mix with non devotees nor consider living like Lords a virtue. My Lord of Arangam, –my master for seven lives, –is the Lord of gods. I only crave for him.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top