(66)

(66)

நம்முடை நாயகனே நான்மறை யின்பொருளே நாபியுள் நற்கமல நான்முக னுக்குஒருகால்

தம்மனை யானவனே தரணி தலமுழுதும் தாரகை யின்னுலகும் தடவி அதன்புறமும்

விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ்விடையும் விரவிய வேலைதனுள் வென்று வருமவனே

அம்ம எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.

பதவுரை

நம்முடை

எங்களுக்கு
நாயகனே

நாதனானவனே!
நால் மறையின்

நாலுவேதங்களுடைய
பொருளே

பொருளாயிருப்பவனே!
நாபியுள்

திருநாபியில் முளைத்திராநின்ற
நல் கமலம்

நல்ல தாமரைமலரிற் பிறந்த
நான்முகனுக்கு

பிரமனுக்கு
ஒருகால்

அவன் வேதத்தைப் பறிகொடுத்துத் திகைத்தகாலத்தில்
தம்மனை ஆனவனே

தாய்போலே பரிந்து அருளினவனே!
தரணி தலம் முழுதும்

பூமியடங்கலும்
தாரகையின் உலகும்

நிக்ஷத்ரலோக மடங்கலும்
தடவி

திருவடிகளால் ஸ்பர்சித்து
அதன்புறமும்

அதற்குப் புறம்பாயுள்ள தேசமும்
விம்ம

பூர்ணமாம்படி
வளர்ந்தவனே

த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே!
வேழமும்

குவலயாபீடமென்ற யானையும்
ஏழ்விடையும்

ஏழு ரிஷபங்களும்
விரவிய

(உன்னை ஹிம்ஸிப்பதாக)  உன்னோடு வந்து கலந்த
வேலைதனுள்

ஸமயத்திலே
வென்று

(அவற்றை) ஜயித்து
வருமவனே

வந்தவனே!
அம்ம

ஸ்வாமியானவனே!

எனக்கு . . .  ஆடுக.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – கர்மகாண்டம் என்றும் ப்ரஹ்மகாண்டம் என்றும் பகுக்கப்பட்டுள்ள வேதராசியில் முந்தின பகுதியில் பலப்பல கருமங்கள் மாத்திரமே சொல்லப்பட்டு பரப்ரஹ்மஸ்வரூபம் சிறிதும் சொல்லப்படாதிருந்தாலும் வைதிக கருமங்கள் யாவும் எம்பெருமானையே  ஆராதிப்பனவாதலால் அப்படிப்பட்ட கருமங்களைச் சொல்லுகிற பூர்வகாண்டமும் பரம்பரையாய்ப் பரப்ரஹ்ம ப்ரதிபாதநத்திலேயே முடிவடைகின்றன வென்பது ஆன்றோர்களின் ஸித்தாந்தமாதலால் நான்மறையின் பொருளே! என்றார்.

மதுகைடபர்கள் நான்முகனிடத்திலிருந்து வேதங்களைப் பறித்துக்கொண்டு போனபோது அப்பிரமன் வேதங்களை யிழந்ததற்காக ‘கண்ணிழந்தேன் பொருளிழந்தேன்’ என்று கதறிக்கதறியழ அவ்வேதங்களை எம்பெருமான் மீட்டுக்கொணர்ந்து கொடுத்துத் துயர்தீர்த்ததனால் “நான்முகனுக் கொருகால் தம்மனையானவனே!” என்றார்.

English Translation

O, Lord, you are the substance of the four Vedas; help for the four-faced Brahma seated on your lotus navel when he was in distress by Madhu-Kaitabha!   You grew as Trivikrama to encompass the whole Earth, the Milky Way and beyond.  When confronted by the elephant Kuvalayapida and the seven bulls in a contest for Nappinnai you emerged victorious! O, Lord, dance! Dance the Senkirai.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top