(638)

(638)

அனுங்க வென்னைப் பிரிவுசெய் தாயர் பாடி கவர்ந்துண்ணும்

குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த் தனனைக் கண்டீரே

கணங்க ளோடு மின்மேகம் கலந்தாற் போல வனமாலை

மினுங்க நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே

பதவுரை

அனுங்க

நான் வருந்தும்படியாக
என்னை பிரிவு செய்து

என்னைப் பிரியவிட்டுப்போய்
ஆயர்பாடி

திருவாய்ப்பாடியை
கவர்ந்து

ஆக்ரமித்து
உண்ணும்

அநுபவிக்கின்றவனாய்
மின் மேகம்

மின்னலும் மேகமும்
கலந்தால்போல்

ஒன்றோடொன்று சேர்ந்தாற்போலே
வனமாலை மினுங்க நின்று

(கறுத்த திருமேனியிலே மின்னல் போன்ற) வனமாலை திகழப்பெற்று
குணுங்கு நாளி

வெண்ணெய் மொச்ச நாள்ளம் நாறுமவனாய்
குட்டேற்றை

இளைய ரிஷபம்போன்றவனான
கோவர்த்தனனை

கண்ணபிரானை கண்டீரே?
கணங்களோடு

(தோழன்மாருடைய) கூட்டங்களோடு கூட
விளையாட

விளையாடாநிற்க (விருந்தாவனத்தே கண்டோம்)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நான் மிகவும் தளர்ச்சியடையும்படி என்னைப் பிரிந்துபோய்த் திருவாய்ப்பாடி முழுதையுங் கொள்ளை கொண்டு திரியுமவனாய், * வெண்ணெயளைந்த குணுங்கு நாற்றம் கமழுமவனான கோபாலகிருஷ்ணனைக் கண்டதுண்டோ? என்று கேட்பார் பாசுரம் -முன்னடிகள். மின்னலும் மேகமும் சேர்ந்தாற்போலே, ஸ்யாம்மான திருமேனிக்குப் பரபாகமாய் உஜ்ஜவலமான வனமாலை அசையை அசையத் * தன்னோராயிரம் பிள்ளைகளோடு விளையாட நிற்க விருந்தாவனத்தே கண்டோமென்று விடையளிப்பார் பாசுரம் பின்னடிகள்.

ஆயர்பாடி கவர்ந்துண்ணும் – ஆயர்பாடி யென்றது இடவாகு பெயராய், திருவாய்ப்பாடியிலுள்ள பெண்களையும் தயிர் நெய்பால் முதலிய போக்யபதார்த்தங்களையும் குறிக்கும் குணுங்கு நாற்றமாவது – மொச்ச நாள்ளம். இடைச்சாதியர்க்கு இளயல்வான நாற்றம். குட்டேறு – இளையவ்ருஷபம் கோவர்த்தனன் – பசுக்களை ஒன்று நூறாக வளர்க்குமவன்.

கண்களோடு – (***) என்னும் வடசொல் – கூட்டமென்று பொருள்படும். இங்கே, தோழன்மார் கூட்டமெனக் கொள்க. * தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவானிறே கண்ணபிரான். மின் மேகம் – உம்மைத்தொகை மின்னலும் மேகமும் என்றவாறு.

English Translation

“Leaving me forlorn, a youthful butter-stench bull went raiding into Ayppadi. Did you see this Govardhana lad?” “With his Vanamala shining on his dark frame like a lightning over clouds, we saw him playing with his gang in Brindavana”.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top