(616)

(616)

செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த

மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்

தம்மை யுகப்பாரைத் தாமுகப்ப ரென்னும்சொல்

தம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே

பதவுரை

செம்மை உடைய

(மனமொழி மெய்கள் மூன்றும் ஒருபடிப்பட்டிருக்கையாகிற) செம்மைக்குணமுடைய
திருஅரங்கர்

ஸ்ரீரஙகநாதர்
தாம் பணித்த

(முன்பு) தம்வாயாலே அருளிச்செய்த
மெய்ம்மை

ஸத்யமானதும்
பெரு

பெருமை பொருந்தியதுமான
வார்த்தை

சரமச்லோகரூபமான வார்த்தையை
விட்டுசித்தர்

(என் திருத்தகப்பனாரான) பெரியாழ்வார்
கேட்டு இருப்பர்

(குருமுகமாகக்) கேட்டுற (அதில் சொல்லியிருக்கிறபடி) நிர்ப்பரராயிப்பர்
தம்மை உகப்பாரை தாம் உகப்பர் என்னும் சொல்

“தம்மை விரும்பினவர்களைத் தாமும் விரும்புவர்“ என்ற பழமொழியனது
தம் இடையே

தம்மிடத்திலேயே
பொய் ஆனால்

பொய்யாய்ப் போய்விட்டால்
இனி

அதற்குமேல்
சாதிப்பார் ஆர்

(அவர்தம்தை) நியமிப்பார்ஆர்? (யாருமில்லை)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நெஞ்சில் நினைப்பது ஒன்றாய் வாயாற் சொல்வது வேறொன்றாய், பின்பு அநுஷ்டிப்பது மற்றொன்றாயிருக்கும்  செவ்வைக்கேடர்களை ஒருங்கவிடுக்கை மநோவாக்காயங்கள் மூன்றும் ஒருபடிப்பட்டிருக்குமவராய் அக்குணம்விளங்குமாறு கோயிலிலே கண்வளர்ந்தருளுமவரான பெருமான், முன்பு அர்ஜுநனை வ்யாஜீகரித்து அவனுடைய தேர்த்தட்டிலே நின்றுகொண்டு, யதார்த்தமுமாய் ஸ்லாக்யமுமான ஒருவார்த்தையை அருளிச்செய்தார், அதாவது -“உன்காரியங்களை யெல்லாம் குறையறத் தலைக்கட்டிவைக்க நானிருக்கிறேன், நீன ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டியத்தில்லை, உனது ஸகலபாரங்களையும் என்பக்கல் ஸமர்ப்பித்து நிர்ப்பரனாய் இரு“ என்று உரைத்த சரமஸ்லோகம். அவ்வார்த்தையைக்கேட்டு அதன்படியே நிஷ்டையுடையராயிருப்பர் பெரியாழ்வார் என்கிறாள் முன்னடிகளில், அவருடைய மகளான தனக்கும் அந்த அத்யவஸாயமே புகல் என்று காட்டியவாறு.

(தம்மையுகப்பாரை இத்யாதி) நாட்டில் ஒருவன் ஒருவனைநோக்கி “நீ ஆர்க்கு நல்லவன்?“ என்றால், அதற்கு அவன் “நான் நல்லார்க்கு நல்லன்“ என்று மறுமொழி கூறுவது ஸார்வலௌகிகம். “நல்லார்க்குத் நீயாருண்டோ?“ என்றும் ஒரு உலகநீதியுண்டு. இந்த உலகவழக்குச்சொல் அவ்வெம்பெருமானிடத்துப் பொய்யாகப் போய்விட்டால் “ஏன் நீர் இப்படி அநியாயம் பண்ணுகிறீர்?“ என்று அவரைக் கேட்பதற்கும் “இனிநீர் இன்னபடி வர்த்திக்கவேணும்“ போலே, * நெறியெல்லாம் எடுத்துரைத்தவனே நன்னெறிக்கு மாறுபாடாக நடக்காகில் நாமோ அவனுக்கு நெறியுரைப்பது.? “மாமேகம் ஸரணம் வ்ரஜ“ என்று அவர் நமக்கு விதித்த காரியத்தை நாம் குறையறச்செய்து தலைக்கட்டினோம். “மோக்ஷயிஷ்யாமி“ என்றும் “மாஸுச“ என்றும் ஸவக்ருத்யமாக அவர்சொல்லிற்றை அவர் நிறைவேற்றாதொழியில் நாம் என்செய்வது? என்கிறாள் போலும்.

“***“ என்பது தமிழ்நெறிக்கிணங்கச் “சாதிப்பார்“ என்று கிடக்கிறது. “***“த்தல்- நியமித்தல். இங்கே வியாக்கியான ஸ்ரீஸூக்தி- “உம்மையுகந்தவனை நீரும் உகக்கவேணும் என்று கஸையெடுத்துக் கற்பிக்கவோ.“ (இவ்விடத்தில் அச்சுப்பிரதிகளில் “கஸையெடுத்து உகப்பிக்கவோ“ என்றிருப்பது பிழையோயம். “கஸையடித்துக் கற்பிக்கவோ?“ என்றும் பாடமுண்டு. கஜையாவது – மாடுகுதிரை முதலியவற்றைத் துரத்துங் கருவியான சாட்டை. தாடநதர்ஜநாதிகள் பண்ணி மாணாக்கர்களுக்குக் கற்பிக்குமாபோலே எம்பெருமானுக்குக் கற்பிக்க யாரால் முடியும் என்றவாறு.

கண்ணபிரான் எந்தத்தேரில் இருந்து கொண்டு கீதை அருளிச்செய்தன்னோ அந்தத்தேர் பெரியதிருவடியின் அபராவதாரமென்பது ஸம்ப்ரதாயம், விட்டுசித்தரும் பெரியதிருவடியின் அபராவதாரபூதர், ஆகவே விட்டுசித்தர் அப்போது தேராக இருந்துகொண்டு கீதையைக் கேட்டிருப்பர் என்கிற கருத்துப்பட இப்பாசுரத்தில் இரண்டாமடி அமைந்திருக்கிற அழகு காண்மின்.

English Translation

Vishnuchitta is well versed in the love of the Arangam Lord’s famous truisms. If “he-who-loves is-also-loved” be false with the Lord, What can anyone say with certainty thereafter?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top