(606)

(606)

நல்லஎன் தோழி நாக ணைமிசை நம்பரர்

செல்வர் பெரியர் சிறுமா னிடவர்நாம் செய்வதென்

வில்லி புதுவை விட்டுசித் தர்தங்கள் தேவரை

வல்லி பரிசு வருவிப்ப ரேலது காண்டுமே

பதவுரை

என்நல்லதோழி!

எனது உயிர்த்தோழியே,
நாக அணைமிசை

திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே சயனித்திருக்கிற
நம் பரர்

நம்பெருமாள்
சிறு மானிடவர்

க்ஷுத்ர மநுஷ்யரா யிராநின்றோம் (இப்படிப்பட்டநாம)
என் செய்வது

என்ன செய்யலாம்?
வில்லி புதுவை விட்டுசித்தர்

ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு நிர்ஹகரான பெரியாழ்வார்
செல்வர்

பெருஞ்செல்வம்படைத்தவர்
பெரியர்

எல்லாரினும் மேற்பட்டவர்
நாம்

நாமோவென்றால்
தங்கள் தேவரை

தமக்கு விதேயரா யிருக்கிற அப்பெருமானை
வல்ல பரிசு

தம்மால் கூடினவகைகளாலே
வருவிப்பரேல்

அழைப்பராகில்
அது காண்டும்

அப்போது (அவனை) நாம் ஸேவிக்கப்பெறுவோம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆண்டாள் இப்படி பகவத்விரஹத்தாலே ஆற்றமாட்டாதாளாய்ப்படுகிற அலமாப்பைக் கண்ட உயிர்த்தோழியானவள். ‘ஐயோ! இவள் இப்பாடுபடுகின்றாளே! இவளை நாம் எப்படித் தேற்றுவிப்பது! ஒருவழியும் தெரியவில்லையே! என்று சிந்தித்து வ்யஸநித்திருக்கையில், ஆண்டாள் அவ்வுயிர்த்தோழியைநோக்கி ‘நீ அஞ்சவேண்டா; ஜீவிப்பதற்கு ஒருவழி கண்டேன்காண்‘ என்கிறாள்.

திருவனந்தாழ்வான்மேல் ஸயனித்தருளுமவராய் ஸ்ரிய பதியாய்ப் பரம புருஷராயிருக்கிறவரை அதிக்ஷுத்ரராயிருக்கிற நாம் எங்ஙனே அணுகமுடியும்? “அம்மானாழிப்பிரானவன் எவ்விடத்தான்யானார்?“ என்னுமாபோலே அவருடைய பெருமைக்கும் நம்முடைய சிறுமைக்கும் எவ்வளவோ வாசியுண்டாயிருக்க அவரை நாம் வளைப்பிடமுடியுமோ? முடியாது. ஆகில் நாம் இழந்தேபோகவேண்டியதேர்வென்னில், இழவாமைக்கு ஒருவழியுண்டு; அப்பெரியவர் நமக்குவசப்படமாட்டாராயினும் நம் அண்ணலான் பெரியாழ்வார்க்கு வசப்படாதிருக்க அவரால் முடியாது. அந்த நாகணைமிசைநம்பரர் தாமே பெரியாழ்வாரிடத்தில் கோற்கீழ்க்கன்றாயிருப்பர். “பூச்சூட்டவாராய்“ என்றும் “நீராடவாராய்“ என்றும் “காப்பிடவாராய்“ என்றும் அவர் அழைத்தவாறே அப்பெரியவர் பதறி ஓடி வருவர்; அப்போது நாம் எளிதாக அவரை ஸேவிக்கப் பெறுவோமென்கிறாள்.

வல்லபரிசுவருவிப்பரேல் – ஒருபூவையிட்டு வரப்பண்ணவுமாம், ஒரு இசையைச்சொல்லி இசைவிக்கவுமாம்; கிரியையறுத்து வரப்பண்ணவுமாம், திருமஞசனத்தைச்சேர்த்து அழைக்கவுமாம்; திருக்குழல் பணியைச் சேர்த்துவைத்து அழைக்கவுமாம் ; திருவந்திக்காப்பிட்டு அழைக்கவுமாம்; ……………அன்றிக்கே, அவர் தம்மை முன்னிட்டாப்போலே அவர் தமக்குப்புருஷகாரமாவாரை முன்னிட்டு வரப்பண்ணவுமாம் அவ்வழியாலே பெறக்கடவோம்“ என்ற வியாக்கியமான ஸூக்தியின் போக்யதை அநுபவிக்கத்தக்கது.

இத்திருமொழிக்குப் பலஸ்ருதி அருளிச்செய்யாமல் இப்பாட்டே அதன் ஸ்தாநத்தில் நின்றது. பாகவதஸம்பந்தத்தைக் கொண்டு உஜ்ஜீவிக்கப்பெறுவர்கள் என்பதே இத்திருமொழிக்கும் பலஸ்ருதியாகக் கொள்ளத்தக்கது.

English Translation

My Good Sister! Our Lord, who reclines on the serpent conch, is rich and powerful. What can we small mortals do? When Villiputtur’s Vishnuchitta, our Father, welcomes his Lord with proper presents, we shall see him then.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top