(594)
காலை யெழுந்திருந்து கரியகுரு விக்கணங்கள்
மாலின் வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ
சோலை மலைப்பெருமான் துவராபதி யெம்பெருமான்
ஆலி னிலைப்பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே
பதவுரை
| கரிய குருவி கணங்கள் |
– |
கரியகுருவிக் கூட்டங்கள் |
| காலை |
– |
விடியற்காலத்திலே |
| எழுந்திருந்து |
– |
எழுந்து, |
| சோலைமலை பெருமான் |
– |
திருமாலிருஞ்சோலை மலைக்குத் தலைவனாயும் |
| துவராவதி எம்பெருமான் |
– |
த்வாரகர் புரிக்குத் தலைவனாயும் |
| ஆலின் இலை பெருமான் அவன் |
– |
ஆலிலையில்வளர்ந்த பெருமானுயுமுள்ள அந்தஸர் வேச்வரனுடைய |
| வார்த்தை |
– |
வார்த்தைகளை |
| உரைக்கின்ற |
– |
சொல்லாநின்றன. (இப்படி) |
| மாலின் |
– |
எம்பெருமானுடைய |
| வரவு |
– |
வருகையை |
| சொல்லி |
– |
சொல்லிக்கொண்டு |
| மருள் பாடுதல் |
– |
மருளென்கிற பண்ணைப்பாடுவதானது |
| மெய்ம்மை கொல் |
– |
மெய்யாகத் தலைக்கட்டுமா |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஆண்டாள் பிறந்தவூரில் திர்யக்குக்களுங் கூட எம்பெருமானைப்பற்றின சிந்தனையே மிக்கிருக்கு மாதலால் சில கருங்குருவிகள் காலை யெழுந்திருந்து கூட்டங் கூட்டமாக இருந்து எம்பெருமானுடைய வரவை ஸூசிப்பித்துச் சொல்லுவதுமா யிருக்கவே, அதுகண்ட ஆண்டாள் இது மெய்யாய்த் தலைக்கட்டுமோ பொய்யாய்விடுமோவென்று சிந்திக்கிறாளாய்த்து.
மெய்ம்மை கொலோ? என்றதற்கு இரண்டு வகையாகக் கருத்தாகலாம். நம்முடைய சித்தவிப்ரமத்தால் இவை பாடுகின்றனவாகத் தோற்றுகின்றதா? அல்லது மெய்கவே பாடுகின்றனவா? என்பது ஒரு கருத்து; இக்கரிய குருவிக்கணங்கள் இதற்கு முந்தியும் பலகால், மாலின் வரவுசொல்லி மருள்பாடியும் அவ்வெம்பெருமான் வரக்காணாமையினாலே இதுவரையில் இவற்றின் பாட்டு பொய்யாயொழிந்தது, இப்போதாவது அங்ஙனன்றி மெய்யாகத் தலைக்கட்டுமா; என்பது மற்றொரு கருத்து.
பாட்டின் இறுதியிலுள்ள உரைக்கின்ற என்பதை வினைமுற்றாகக் கொள்ளாமல் பெயரெச்சமாகக் கொண்டு, . . . “அவன் வார்த்தை யுரைக்கின்ற கரிய குருவிக்கணங்கள் கலையெழுந்திருந்து மாலின் வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ? என்று ஏகவாக்யமாக யோஜிப்பதும் ஒருவாறு பொருந்தும்.
துவராவதி – ‘தவாரவதீ‘ என்ற வடசொல்விகாரம். வார்த்தை – ஸமாசாரம்.
English Translation
Flocks of blackbirds spoke as I woke up this morning, about the Lord of mountain groves, about the King of Dvaraka, about the Lord who slept on a fig leaf in the deluge. Their sweet Marul tune seemed to foretell his coming; could it be true?
