(585)

(585)

மதயானை போலெழுந்த மாமுகில்காள் வேங்கடத்தைப்

பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தையென்னே

கதியென்றும் தானாவான் கருதாதுஓர் பெண்கொடியை

வதைசெய்தான் என்னும்சொல் வையகத்தார் மதியாரே

பதவுரை

வேங்கடத்தை

திருமலையை
பதி ஆக

இருப்பிடமாகக் கொண்டு
வாழ்வீர்கள்

வாழ்கின்றவையாயும்
மதம் யானை போல் எழுந்த

மத்தகஜம்போலே செருக்கிக்கிளர்ந்தவையாயுமுள்ள
மா முகில்காள்

காளமேகங்களே!
பாம்பு அணையான்

சேஷசாயியான எம்பெருமானுடைய
வார்த்தை

வார்த்தையானது
என்னே

இப்படிபொய்யாய் விட்டதே,
தான்

“அவ்வெம்பெருமான்றான்
என்றும்

எப்போதைக்கும்
கதி ஆவான்

(ஆச்ரிதரகட்கு) ரக்ஷகனா யிருந்துவைத்து
கருதாது

அத்தன்மையை நினையாமல்
ஓர் பெண் கொடியை

ஒரு பெண்பிள்ளையை
வதை செய் தான்

கொலை பண்ணினான்“
என்னும்சொல்

என்கிற சொல்லை
வையகத்தார்

இப்பூமியிலுள்ளவர்கள்
மதியாரே

மதிக்கமாட்டார்களே

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மேகங்களைக் கொண்டாடி இருகால் ஸம்போதிக்கிறாள்; திருவேங்கடமுடையானை நீங்கள் இடைவிடாது ஸேவித்துக்கொண்டு அத்தாலே மத்தகஜம் போலச் செருக்கி யிருக்கிறீர்களன்றோ என்பது முதல் விளியின் கருத்து.

குக்ராம்மே குடியிருப்பானவர்கள் வந்தேறிகளாய்த் திருநாள் ஸேவித்து விட்டுப் போவதுபோலன்றியே திவ்யதேஸித்திலேயே நித்யவாஸம் பண்ணப் பெற்றீர்களே! என்னபாக்கியம்!! – என்ற கொண்டாட்டம் இரண்டாம் விளியின் கருத்து.

பாம்பணையான் வார்த்தை என்னே! – திருவநந்தாழ்வானிடத்து ஸகலவித கைங்கரியங்களையுங் கொள்வதுபோல என்னிடத்தும் கொள்வன் என்றிருந்தேன், “நாகபர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்“ என்றபடி ஸேஷ் ஸயநத்தை விட்டுத் திருமதுரையிலே வந்துபிறந்த கண்ணபிரான் தேர்த்தட்டில் நின்று சொன்ன வார்த்தையை (சரமஸலோகத்தை) மெய்யென்று நீம்பியிருந்தேன்; பாம்போடே அனைந்து பாம்பின் தன்மையே தனக்குமுண்டாகப் பெற்றான்; அதற்கு நாக்கு இரணடாயிருப்பதுபோல இன்னும் இரண்டுநாக்குப் பெற்றான், – அதாவது பொய்யனாய்விட்டான் – என்ற கருத்துக்காண்க.

பலபேர்களுக்கு மெய்யானகப் பரிமாறின அவன் உன்னளவிலே பொய்யனான மாத்திரத்தால் அவனுக்கு யாதொரு அபகீர்த்தியும் விளையமாட்டாதென்று மேகங்கள் சொன்னதாகக் கொண்டு மறுமொழி கூறுகின்றாள் பின்னடிகளில். “ரக்ஷிதா ஜீவலோகஸ்ய ஸ்வஜநஸ்யச ரக்ஷிதா“ என்று ஸாமாந்யரக்ஷக்னன்றிக்கே ஸ்வஜநங்களுக்கு விஸெஷித்து ரக்ஷகனாகப் புகழ்பெற்றிருக்குமவன் பின்னை அவனைத் துப்புவாருண்டோ? என்கிறாள்.

சுதி – “***“ கருதாது – தன்னுடைய ரக்ஷகத்வத்தை மறந்து என்றபடி அன்றியே, ‘ஒரு பெண்கொடியை வதைசெய்வதால் நமக்கு ஸ்வரூப ஹாநி விளையப்போகிறதே!‘ என்று கருதாமல் என்றதாகவுமாம். பெண்கொடியை வதைசெய்தானோ வென்னில், ஓர்கொள்கொம்பிலே சேர்க்கவேண்டும் கொடியைத் தரையிலே இட்டுவைப்பது அதனைக் கொலைசெய்வ தொக்குமிறேவதை – “***“ என்ற வடசொல் விகாரம். “பெண்ணீர்மை யீடழிக்குமிது தமக்கோர் பெருமையே“ என்று முதற்பாட்டில் மெழுகினாற்போற் சொன்னதை இப்பாட்டில் விளங்கச்சொன்னாளென்க.

English Translation

O Dark elephant-like clouds from Venkatam! Of what avail are the assurances of one who keeps the company of a two-tongued serpent? He promised refuge to the seeker, but has not kept his word. No more will the world revere him, by the infamy of killing a helpless maiden.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top