(541)

(541)

ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி

மேவ லன்விரை சூழ்துவ ராபதிக்

காவ லன்கன்று மேய்த்து விளையாடும்

கோவ லன்வரில் கூடிடு கூடலே

பதவுரை

ஆவல் அன்பு உடையார் தம்

ஆவலையும் அன்பையும் உடையவர்களுடைய
மனத்து அன்றிமேவலன்

நெஞ்சுதவிர மற்றோரிடத்திலும் பொருந்தாதவனும்
விரை சூழ் துவராபதி காவலன்

நல்ல வாஸனை சூழ்ந்த த்வாரகாபுரிக்கு நிர்வாஹகனும்
கன்று மேய்த்து விளையாடும் கோவலன்

கன்றுகளை மேய்த்து விளையாடும் கோபாலனுமாகிய கண்ணபிரான்
வாரில்  வரக்கூடுமாகில்

கூடலே! கூடிடு.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆவல் அன்புடையயார் தம் ஸ்ரீ  ஆவல் என்றாலும் அன்பு என்றாலும் பொதுப்படையாக ப்ரேமத்தைச் சொல்லுமாகிலும், கோபம் ரோஷம் இத்தியாதிபதங்களின் அர்த்தத்திலே நுட்பமான பேசும் இருக்கிறாப்போலே இங்கும் சிறிது பேதம் உண்டு’ ‘எம்பெருமானே உபாயோபேயங்கள்’ என்கிற ‘அத்யவஸாயம் கிடக்கச்செய்தேயும் நோன்பு நோற்பது, காமன் காலிலே விழுவது, சிற்றிவிழைப்பது பனிநீராடுவது, கூடலிழைப்பது இவைபோல்வன அதிப்ரவருத்திகளில் துணிவைப் பிறப்பிக்கும் ப்ரேமம் ஆவலெனப்படும். “மல்லாண்டதிண்டோள் மணிவண்ணா!” என்று எம்பெருமானுடைய மிடுக்கின் மிகுதியை அறிந்திருக்கச் செய்தேயும் அவனை ரக்ஷ்யனாகவும் தன்னை ரக்ஷகனாகவும் நினைத்துப் பல்லாண்டு பாடுகையிலே ஒருப்படுத்தும் ப்ரேமம் அன்பு எனப்படும் என்று கொள்க. ஆவல்- ஆண்டாளுடையபடி;  அன்பு-இவளுடைய திருத்தகப்பனாரான பெரியாழ்வாருடையபடி, ஆக இவ்விரண்டையும் சொன்னவித்தால் தங்கள் குடியிலுள்ளார் மனத்தோடல்லது வேறொருவர்மனத்தோடு பொருந்தமாட்டான் எம்பெருமான் என்றாளாய்த்து. மேவலன்ஸ்ரீவிரும்பாதவன் என்றபடி “நம்பும் மேவும் நசையாகுமே.” என்பது தொல்காப்பியம்.

துவராபதிக்காவலன்ஸ்ரீ ‘காலயவநன்’ என்பானொருவன் செருக்கித் திரிந்து கொண்டிருக்கையில் ஒருநாள் நாரதரைப் பார்த்து ‘இவ்வுலகினில் சூரரானவர் யாராவது உண்டோ? என்று கேட்க; மதுரையில் யாதவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மிக்கபராக்ரமசாலிகள்’ என்று நாரதர் சொல்ல, அதைக்கேட்டவுடனே அவன் அங்கிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து யாதவர்களுடன் போர்செய்யத் தொடங்க, அப்பொழுது கண்ணபிரான் இதையறிந்து மேற்கடலுக்குச் சென்று அங்கு ஸமுத்ரராஜனை யாசித்துப் பன்னிரண்டு யோஜனை விஸ்தீர்ணமுள்ள இடத்தைவாங்கி அங்கு அழைத்துக்கொண்டு போய் வைத்துக் காலயவநனுடைய பயத்தில் நின்றும் விடுவித்த வரலாறு அறிக.

துவராவதிஸ்ரீ (த்வாரவதி) என்ற வடசொல் திரிபு. விரைசூழ் என்று த்வாரகைக்கு விசேஷணமிட்டது-“மட்டேறுகற்பகத்தை மாதர்க்காய் வண்துவரை நட்டானை” என்ற அருளிச் செயலில் அமைந்த கதையைத் திருவுள்ளம்பற்றி என்னலாம். கண்ணபிரான் ஸத்யபாமையினுடைய வேண்டுகோளுக் கிணங்கி இந்திரன் காவினிலிருந்த பாரிஜாத தருவை த்வாரகையிலே கொணர்ந்து நாட்டினனாதலலால் விரைசூழப் பெற்றதென்க.

(காவலன் கோவலன்) பரத்வம் ஒருபக்கத்திலே, ஸௌலப்யம் ஒருபக்கத்திலே, (‘ஸர்வஸ்யஜகத: பாலௌ வத்ஸபரலௌ பபூவது:’) என்ற ரிஷியைப் போலே அதிசயப்படுகிறாளாய்த்து.  ….   ….   ….   ….   ….   … (அ)

English Translation

Gopala-the-lad who grazed cows happily is the Lord and King of fragrance-wafting Dvaraka. He eludes all but dwells in the hearts of lovers and seekers. If he will come, then join, O Lord-of-the-circle.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top