(533)

(533)

கன்னிய ரோடெங்கள் நம்பி கரிய பிரான்விளை யாட்டை

பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன்பட்டன் கோதை

இன்னிசை யால்சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம்போய்

மன்னிய மாதவ னோடு வைகுந்தம் புக்கிருப் பாரே

பதவுரை

எங்கள் நம்பி

எமக்கு ஸ்வாமியாய்
கரிய

கார் கலந்த மேனியனான
பிரான்

கண்ணபிரான்
கன்னிய ரோடு

ஆயர் சிறுமியரோடே செய்த
விளையாட்டை

திவ்யலீலைகளைக் குறித்து
பொன் இயல்

ஸ்வர்ணமயமான
மாடங்கள் சூழ்ந்த

மாடங்களால் சூழப்பட்ட
புதுவையர் கோன்

ஸ்ரீவில்லிபுத்தூரிரிலுள்ளார்க்குத் தலைவரான
பட்டன் கோதை

பெரியாழ்வார்க்குத் திருமகளான ஆண்டாள்

இன் இசையால்  இனிய இசையாலே

சொன்ன

அருளிச் செய்த
மாலை

சொல்மாலையாகிய
ஈர் ஐந்தும்

இப்பத்துப்பாட்டுக்களையும்
வல்லவர் தாம்

கற்கவல்லவர்கள்
போய்

(அர்ச்சிராதிமார்க்கமாகப்) போய்
வைகுந்தம் புக்கு

பரமதத்தையடைந்து (அவ்விடத்திலே)
மன்னிய

நித்யவாஸம் செய்தருளுகிற
மாதவனோடு

திருமாலோடு கூடி
இருப்பார்

நித்யா நுபவம் பண்ணிக் கொண்டு வாழ்ந்திருக்கப் பெறுவர்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரானுக்கும் இளவாயர்மகளிர்க்கும் பொய்கைக் கரையிலே நடந்த லீலாரஸத்தைக்குறித்து ஆண்டாள் பரமபோக்யமாக அருளிச் செய்த இத்திருமொழியை ஓதவல்லவர்கள், பரமபதம் சென்று புக்குப் பரவாஸுதேவனுடைய பாதாரவிந்தங்களின்கீழ் வாழப்பெறுவர் என்று – இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டியவாறு, ஈற்றடியில் “மன்னிய” என்பதை வைகுந்தத்துக்கு அடைமொழியாக்குதலும் ஒன்று.

அடிவரவு கோழி இது எல்லே பரக்க காலை தடத்து நீர் மாமி கஞ்சன் கன்னி தெள்ளியார்.

English Translation

This decad of sweet songs by Pattarbiran, King of famous Puduvai recalls the words of fragrant coiffured Yasoda to the cloud-hued Lord weaning him from breast milk. Those who sing it well will become devotees of the Lord Hrisikesa.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top