(453)

(453)

துக்கச் சுழலையைச் சூழ்ந்துகிடந்த வலையை அறப்பறித்து

புக்கினில் புக்குன்னைக் கண்டுகொண் டேன்இனிப் போகவிடுவதுண்டே

மக்க ளறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன்வயிற்றில்

சிக்கென வந்து பிறந்துநின் றாய்திரு மாலிருஞ்சோலை யெந்தாய்.

பதவுரை

மக்கள் அறுவரை

உனக்கு முன்பிருந்த (ஆறு பிள்ளைகளையும்
கல் இடை மோத

(கம்ஸனானவன்) கல்லில் மோதிமுடிக்க, (அதனால்)
இழந்தவன் தன்

(அம்மக்கள் அறுவரையும்) இழந்தவனான தேவகியினுடைய
வயிற்றில்

திருவயிற்றில்
சிக்கன வந்து

சடக்கென வந்து
பிறந்து நின்றாய்

திருவவதரித்தருளினவனே!
திருமாலிருஞ்சோலை எந்தாய்

(எல்லார்க்கும் எளியவனும்படி) திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளியிருக்கிற) எம்பெருமானே!
புக்கினில் புக்கு

(நீ) புகுந்தவிடங்களில் எல்லாம் (நானும்) புகுந்து
உன்னை

உன்னு
கண்டுகொண்டு

ஸேவித்து
துக்கம் சுழலையை சூழ்ந்து கிடந்த

துக்கங்களாகிற சுழலாற்றைச் சுற்றுமதிளாகக் கொண்டிருக்கிற
வலையை

வலைபோன்ற சரீரத்தில் நசையை
அற

அறும்படி
பறித்தேன்

போக்கிக்கொண்ட அடியேன்
இனி

(உன்னைப்) பிரயாணப்பட்டுப் பெற்றபின்பும்
போகவிடுவது உண்டே

(வேறிடத்திற்குப்) போகும்படி விடுவது முண்டோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – இரண்டாமடியில், “கண்டுகொண்டேன்” என்ற விடத்துளள் ஏன் விகுதியைப் பிரித்து, முதாலடியிறுதியிலுள்ள ‘பறித்து’ என்பதனோடு கூட்டி யுரைக்கப்பட்டது. இனி இருந்தபடியே அந்வயித்துப் பொருள் கொள்ளுதலும் ஒருவாறு ஒக்குமென்க.

பரத்துவம், அந்தர்யாமித்துவம், வியூஹம், விபலம், அர்ச்சாவதாரம் என்று சொல்லப்படுவனவும், உன்னுடைய பிரவேசமுள்ளனவுமான விடங்களிலெல்லாம் தட்டித்தரிந்து உன்னை ஸேவித்து, பலவைத் துன்பங்களுக்கு இடமான இச்சரீரத்தில் விருப்பை ஒழித்துக்கொண்ட அடியேன் இனி ஒரு நொடிப்பொழுதும் உன்னை விட்டகலகில்லேன் என்கிறார். முன்னடிகளால், சுழலை- சுழன்று சுழன்று வருகிற ஆறு. துக்கங்கள் இச்சரீரத்தைச் சூழவளைந்துகொண்டிருப்பதனால், அவற்றைச் சுழலையாக உருவகப்படுத்தினர். அன்றி, ‘சுழலையை’ என்ற விடத்துள்ள இரண்டனுருபைத் துக்கம் என்பதனோடு கூட்டி, ‘சுழலையை’ என உரைத்தலுமொன்று. ‘சூழ்ந்து கிடந்த’ என்பதைச்  சூழ்ந்துகிடந்த என வலிக்க; பிறவினையில் வந்த தன்வினை வலை என்றசொல் ஆகுபெயரால் உடலை உணர்த்திற்று. ‘வலை என்கிறது, தப்பவொண்ணாமையைப்பற்ற; வலையாவது கயிறுமணியுமாயிருப்பதொன்று; இதுவும் நரம்பு மெலும்புமாயிருப்பதொன்றிறே” என்ற வியாக்கியாகவாக்கியமிங்கு அறியத்தக்கது. இனி, ‘துக்கச் சுழலை’ என்று- துக்கங்கள் சுழல்வதற்கு இடமடான ஆத்துமாவை சொல்லிற்றாய். அதைச் சூழ்ந்துகிடந்தவலை என்று- அவித்யாகர்ம வாஸாநாருசிகளைச் சொல்லுகிறதாகவும் கொள்ளலாம். புக்கினில்- ‘புத்தகங்களில்’ என்பதன் மருஉ. பாத்வ, அந்தர்யாமித்வ, வியூஹ, விபவ, அம்சாவதாரங்களளவாகப் பக்குக்காண்கையாவது- அந்த அந்த நிலைகளைப் பிரத்யக்ஷமாகாகாரமான  நஸஸாக்ஷாத்காரத்தினால் அநுபவித்துப்பாடுவகை கல்லிடை மோத- கல்மேல அறைய என்றபடி.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top