(432)

(432)

மாய வனைமது சூதனன் தன்னை மாதவ னைமறை யோர்க ளேத்தும்

ஆயர்க ளேற்றினை அச்சுதனன் தன்னை அரங்கத் தரவணைப் பள்ளி யானை

வேயர் புகழ் வில்லிபுத் தூர்மன் விட்டுசித் தன்சொன்ன மாலை

பத்தும் தூய மனத்தன ராகி வல்லார் தூமணி வண்ணனுக் காளர் தாமே.

பதவுரை

மாயவனை

ஆச்சரியசக்தியுடையவனும்
மதுசூதனனை

மது என்ற அசுரனை ஒழித்தருளினவனும்
மாதவனை

பெரியபிராட்டியார்க்கு வல்லபவனும்
மறையோர்கள்

வைதிகர்களின்
ஏத்தும்

துதிக்கப்படுமவனும்
ஆயர்கள் ஏற்றினை

இடையர்களுக்குத் தலைவனும்
அச்சுதனை

(அடியாரை ஒருநாளும்) நழுவ விடாதவனும்
அரங்கத்து

கோயிலில்
ஆரவு அணை

சேஷசயகத்தில்
பள்ளியானை

கண்வளர்த்தருள்பவனுமான எம்பெருமானை நோக்கி
வேயர்

தாம் திருவவதரித்த குடியிலுள்ள ரெல்லோராலும்
புகழ்

புகழப்பட்வரம்
வில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு

மண்  நிர்வாஹருமான

விட்டுசித்தன்

பெரியாழ்வார்
சொன்ன

அருளிச்செய்த
மாலை

சொல்மாலையான
பத்தும்

இப்பத்துப்பாசுரங்களையும்
தூய மணத்தனர் ஆகி

நிர்மலமான நெஞ்சையுடையராய்க் கொண்டு
வல்லார் தாம்

ஓதவல்லார்கள்
தூய மணி

பழிப்பற்ற நீலமணிபோன்ற வடிவையுடைய எம்பெருமானுக்கு
ஆளர்

அடிமை செய்யப் பெறுவர். (ஏ அசை.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாடல், இத்திருமொழி கற்பார்க்கப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார். மேன்மைக்கு “அமரரேறு” என்பதுபோல, நீர்மைக்கு “ஆயர்களேறு” என்பதாம். நம்பூருவாசாரியர்கள் பெரியபெருமானைக் கிருஷ்ணாவதாரமாக அநுஸந்தித்துப் போருவர்கள்; “ கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெயுண்டவாயன் என்னுள்ளங் கவர்ந்தானை, அண்டர்கோ  னணியாங்கள் என்னமுதிலே” என்றார்  திருப்பாணாழவார். திருபவளத்தை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் மணக்கும் என்றருளிச் செய்வர். ***-***- – என்று- யசோதைப்பிராட்டி பிள்ளைப்பணியாகச் சாத்தின திருவாபரணம் இப்போதும் பெரியபெருமாள் திருக்கழுத்திற் கிடக்கிறதென்று நேரில் கண்டநுபவித்து அருளிச் செய்தார் பட்டரும்.

தூயமனத்தனராகி வல்லார்- அநந்யப்ரயோஜநராக ஓதவல்லர்கள் என்றபடி; இதனால், சோறு கூறைகளையே முக்கிய பிரயோஜநமாக நச்சி ஓதுமவர்களை வியாவர்த்திக்கின்ற தென்க.

English Translation

This garland of verses in praise of the wonder-Lord Madhava, Madhu sudana, cowherd-Lord Achyuta, Lord extolled by the Vedas, Lord reclining on a serpent bed, is sung by Vishnuchitta of famed Srivilliputtur, scion of the Veyar clan. Those who master it with purity of heart will become servants of the gem-Lord himself!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top