(425)

(425)

எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன்தமர் பற்றும் போது

நில்லுமி னென்னும் உபாய மில்லை நேமியும் சங்கமும் ஏந்தி னானே

சொல்லலாம் போதேஉன் நாம மெல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்

அல்லல் படாவண்ணம் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.

பதவுரை

நேமியும்

திருவாழியையும்
சங்கமும்

ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும்
ஏந்தினானே

கையில் அணிந்து கொண்டுள்ளவனே
வாசல் குறுகச் சென்றால்

(யமபுரத்துக்குப்) போம் பழியைக் கிட்டப் புகுந்தால்
நமன் தமா

யமகிங்காரர்கள்
ஏற்றி

அடித்து
பற்றும்போது

பிடிக்குங் காலத்தில்
நில்லுமின் என்னும்

“கடக்க நில்லுங்கள்” என்ற (அவர்களைக் கிட்ட வாவொட்டாமல்) தடுக்கும்படியான
உபாயம் இல்லை

ஓருபாயமும் (என் கையில்) இல்லை;
சொல்லலாம் போதே

வாய்விட்டுச் சொல்லுகைக்கு உரிய இப்போதே

அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!

எல்லையில்

(அடியேனுடைய வாழநாளின்) எல்லையாகிய சரமதசையில்
உன்

உன்னுடைய
நாமம் எல்லாம்

திருநாமங்களை யெல்லாம்
சொல்லினேன்

சொன்னேன்;
என்னை

அடியேனை
குறிக்கொண்டு

திருவுள்ளதிற்கொண்டு
என்றும்

எப்போதும்
அல்லல் படா வண்ணம்

அநர்த்தப் படாதபடி
காக்க வேண்டும்

ரக்ஷித்தருளவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எல்லை என்று – மரணதசையைச் சொல்லுகிறது; ஆயுஸ்ஸுக்கு மரணம் எல்லையாதலால். வாசல் -‘வாயில்’ என்பதன் மரூஉ. எற்றுதல் – அடித்தல். உபாயம்- வடசொல்; ஸாதகம் என்பது பொருள். “நில்லுமினென்னவுபாயமில்லை” என்று சிலர் ஓதுவர்.

எம்பெருமானே! நான் சரமதசையில் கர்மபலாநுபவத்துக்காக யமபுரதின்வழியே சென்றால் அங்க யமகிங்கரர்கள் வந்து என்னை அடித்துப் பிடிக்கும்போது, “நீங்கள் என்னருகில் வரக்கூடாது” என்று அவர்களைத் தடுக்க என்னால் முடியாது: ஆதலால், அப்படிப்பட் அநர்த்தம் அடியேனுக்கு விளையவொண்ணாமைக்கு உறுப்பாக இப்போதே உன் திருநாமங்களையெல்லாம் அநுஸந்தித்துவிட்டேன்; இதுவே ஹேதுவாக என்னை நீ திருவுற்றதிற்கொண்டு காத்தருளவேணுமென்றவாறு

English Translation

O Lord of Srirangam reclining on a serpent bed! Pray bear me in mind always and protect me from miseries. O Lord of conch and discus, I prate you names here and now, when I can, for when the gates of the nether world approach and Yama’s agents kick and grab me, I will have no power to say “Hold”!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top