(3997)
பெற்றினிப் போக்குவனோ உன்னை என் தனிப் பேருயிரை
உற்ற இருவினையாய் உயிராய்ப் பயனாய் அவையாய்
முற்றவிம் மூவுலகும் பெருந் தூறாய்த் தூற்றில்புக்கு
முற்றக் கரந்தொளித் தாய்.என் முதல்தனி னித்தேயோ
பதவுரை
|
உற்ற இரு வினை ஆய் |
– |
ஆத்மாவைப்பற்றின புண்ய பாப ரூப கருமங்களுக்கு நிர்வாஹகனாய் |
|
உயிர் ஆய் |
– |
கர்ம வச்யனான ஆத்மாவுக்கு நியந்தாவாய் |
|
பயன் அவை ஆய் |
– |
கருமபலனான ஸீக துக்கங்களைக் கொடுப்பவனாய்க் கொண்டு |
|
இம் மூவுலகும் முற்ற பெருதூறு ஆய் |
– |
இந்த மூவுலக மெல்லாமாகிற பெரிய தூற்றை யுண்டாக்கினவனாய் |
|
தூற்றில் புக்கு |
– |
இந்தத் தூறு தன்னுள்ளே புகுந்து |
|
முற்ற கரந்து ஒளித்தாய் |
– |
ஒருபடியாலு மறிய வொண்ணாதபடி மறைந்து நிற்குமவனாய் |
|
என் முதல் தனி வித்தே ஓ |
– |
எனக்கு உன்னைக் கிட்டுகைக்கு மூல ஸீக்ருதமாயிருப்பவனே! |
|
என் தனிபேர் உயிரை உன்னை |
– |
எனக்கு அஸாதாரண தாரகனான வுன்னை |
|
பெற்று இனி போக்குவனோ |
– |
பெற்று வைத்து இனி விடுவேனோ! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
-மிகவும் விஸஜாதீயனாயிருந்த எனக்கு மிகவும் தாரகனான வுன்னை பெற்று வைத்து இனி விடுவேனோ? உயிரைவிட்டு உடல் தாரிக்கவற்றோ வென்கிறார். இப்பாட்டில் ‘என் தனிப் பேருயிரை” என்பது உயிரானது. உற்ற இருவினையாய்-உன்னை யொழிய வேறு சில கருமங்களை ஸ்வதந்த்ரமாக நினைத்திருந்தே னாகிலன்றோ உன்னை யொழிய வேறு சில கருமங்களை ஸ்வாந்த்ரமாக நினைத்திருந்தே கிடக்கிற புண்யபாபங்களாகிற கருமங்கள் நீயிட்ட வழக்கன்றோவென்கை. உயிராய்-கருமங்களை யஎஷ்டிப்பவர்களான சேதநா;களும் நீயிட்டவழக்கன்றோ. பயனாயவையாய்-கருமபலன் உன்னையொழிய ஸித்திக்குமென்றிருந்தேனோ வென்கை. இப்போது இவை யெல்லாஞ் சொல்லுகிறது எதற்காக வென்னில்; தம்மிடத்தில் ஒன்றும் எதிரிபார்க்க நியாயமில்லை யென்கைக்காக.
முற்றவிம் மூவுலகும் பெருந்தூறாய்-மூவுலகங்களுமாகிற இந்த ஸம்ஸாரம் புதர் போன்றது, இதை யுண்டாக்கினவனும் நீயே. தூற்றில் புக்கு முற்றக் கரந்தொளித்தாய்-இங்ஙனே புதராயிருக்கின்ற ஸம்ஸார நிலமெங்கும் வியாபித்து ஒருவருமறயாதபடி நின்றாய். என் முதல் தனிவித்தே!-எனக்கு ப்ரதமஸீக்ருத மானவனே! என்றபடி. நானாக ஒரடிவந்திலேன்; முதலே பிடித்து க்ருஷிபண்ணினவன் நீயேயன்றோ வென்றபடி. ஆக இவ்வளவு ஹேதுக்களாலே உன்னை இனிப்போக்குவனோ வென்றாராயிற்று.
English Translation
How will let you go, my own sweet over-soul? You are the endless karmas, their fruit and the enjoyer. Like a huge black hole you have entered the three worlds, and hidden yourself completely! O My first-seed!
