(3984)

(3984)

வேள்வியுள் மடுத்தலும் விரைகமழ் நறும்புகை காளங்

கள் வலம்புரி கலந்¦ தங்கும் இசைத்தனர்

ஆளுமிங்கள் வானகம் ஆழியான் தமர் என்று

வாளொண்கண் மடந்தையர் வாழ்த் தினர் மகிழ்ந்தே

 

பதவுரை

வேள்வி உள் மடுத்தலும்

வைதிகர்கள் தம்தம் தேவ பூஜா பலன்களை ஸமரிப்பித்தவளவிலே

விரை கமிழ

பரிமளம் மிக்க

நறுபுகை

ஸீகந்த தூபங்களானவை

எங்கும் கலந்து

எங்கும் வியாபிக்க

காளங்கள் வலம் புரி

திருச்சின்னங்களையும் சங்கு களையும்

இசைத்தனர்

ஊதினார்கள்

வாள் ஒண் கண் மடந்தையர்

ஒளிமிக்க கண்களையுடைய தேவஸ்த்ர்கள்

ஆழியான் தமர்

“திருவாழியை யேந்திய எம்பெருமாளுக்கு அடிமைப்பட்டவர்களே!

வானகம் ஆண் மின்கள் என்று

இந்த ஸ்வர்க்காதிபதங்களை ஆளுங்கோள்” என்று சொல்லி

மகிழ்ந்து வாழ்த்தினா

ப்ரீதியுடன் வாழ்த்தினார்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

-திவ்யாப்ஸரஸ்ஸீக்கள் மகிழ்ந்து வாழ்த்தினபடியை யருளிச்செய்கிறார். வேள்வியுள் மடுத்தலும்-கீழ்ப்பாட்டிற் சொன்ன யாகபல ஸமரிப்பணம் நடைபெற்றவளவிலே யென்றபடி. வேறே சிலர்நறுமணம் மிக்க தூபங்களையிட்டார்கள். வேறே சிலர்காளங்களையும் சங்குகளையும் ஒலிப்பித்தார்கள் காளமென்பது திருச்சின்னம்; காஹளம் காஹளீ என்;பர்வடநுற்லார். காஹன மென்ற சொல்லே காளமெனத் திரிந்தது.

ஆழியான்தமர் வானகம் ஆண்மின்கள் என்று வாளொண்கண் மடந்தையர் மகிழ்ந்து வாழ்த்தினர்-எம்பெருமானுடைய கையுந்திருவாழியுமான அழகிலே யீடுபட்டவர்களன்றோ நீங்கள்; வாருங்கள்! இவ்விடத்தை யாறுங்கள்! என்று சொல்லி திவ்யாப்ஸரஸ்ஸீக்கள் மகிழ்ந்து வாழ்த்தினர். வாளொண்கண் என்ற அடைமொழியின் கருத்தை நம்பிள்ளை விவாரித்தருளுகிறார் காண்மின்-“தேசாந்தரத்தில் நின்றும் போந்த ப்ரைஜையைத் தாய்மார் குளிரப் பார்க்குமாபோலே ஒளியையுடைய அழகிய கண்களாலே குளிர நோக்கினபடி”. (மகிழ்ந்து) என்பதனால் ஒருவருடைய நிர்ப்பந்தத்திற்காகச் செய்கிறார்களல்லர், ப்ரீதிதூண்டச் செய்கிறார்களென்பது போதரும் முடிவில் நம்பிள்ளை ஸ்ரீஸீக்தி;-“இங்கு பகவத் ஸம்பந்தமே ஹேதுவாக நீசராலே பாரிபூதனாய்ப் போந்தவன் சாரிர வியோக ஸமநந்தரத்தில் தங்களுக்கு அவ்வருகில்

திருவாய்மொழி-திவ்யார்த்ததீபிகை

லா தார் கொண்டாடும்படியிறே பெறும்பேறு.” தங்களுக்கு அவ்வருகில்லாதாரென்றது எல்லார்எம் மேம்பட்டவர்களென்றபடி.

 

English Translation

Incense rose with fire oblations, bugles and concehs rent the air, “Rule the sky, O Devotee!”, the Vel-eyed dames cheered lustly

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top