(3967)
மானாங்கார மனம்கெட ஐவர் வன்கை யர்மங்க
தானாங்கார மாய்ப்புக்குத் தானே தானே யானானை
தேனாங் காரப் பொழில்குருகூர்ச் சடகோபன்சொல்லாயிரத்துள்
மானாங்காரத்திவைபத்தும் திருமாலிருங்சோலைமலைக்கே
பதவுரை
|
மான் ஆங்காரம் மனம் கெட |
– |
மஹான் அஹங்காரம் மனம் என்னுமிவை கெடும்படியாகவும் |
|
வன்கையர்; ஐவர் மங்க |
– |
கொடிய இந்திரியங்களைந்தும் தொலையும்படியாகவும் |
|
தான் ஆங்காரம் |
– |
தானே அபிமானியாய்ப் புகுந்து |
|
தானே தானே ஆனானே |
– |
ஆத்மாத்மீயர்கள் தானேயாயிருக்கிற பெருமானை, |
|
தேன் ஆங்காரம் பொழில் |
– |
வண்டுகனுடைய செருக்கையுடைத்தான சோலை சூழ்ந்த |
|
குருகூர் |
– |
திருநகாரிக்குத் தலைவரான |
|
சடகோபன் சொல் |
– |
ஆழ்வாரருளிச் செய்த |
|
ஆயிரத்துள் |
– |
ஆயிரத்தில் |
|
மான் ஆங்காரத்து இவை பத்;தும் |
– |
மஹதஹங்காரதி ரூபமான ப்ரக்ருதி தொலைவதற்காகச் சொன்ன இப்பதிகம். |
|
திருமாலிருஞ் சோலை மலைக்கே |
– |
திருமாலிருஞ்சோலை விஷயமாயி;ற்று. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
இத்திருவாய் மொழியானது திருமாலிருஞ் சோலைமலையைப் பற்றின தென்கிறாரிப்பாட்டில். இது இவர் சொல்லித் தெரியவேண்டுவதன்றே; பாட்டுத் தோறும் திருமாலிஞ் சோலையென வருவதுகொண்டே தெரிந்து கொள்ளக்கூடிய தன்றோ; “இவை பத்தும திருமாலிருஞ் சோலைமலைக்கே” என்று விசேஷித்துச் சொல்லுவதன் கருத்து யாதென்னில்; கேண்மின்; கீழே (2-10.) கிளரொளியிளமைப் பதிகத்தில் “மயல்மிகு பொழில் சூழ்மாலிருஞ்சோலைக் என்கிறார்; அஜ்ஞானத்தை மிகுவிக்கும் தேசம் என்பது கருத்து; ஸம்சயமும் அஜ்ஞானத்தில் ஒரு வகுப்பாகையாலே, மயர்வற மதிநல மருளப்பெற்ற ஆழ்வார் தமக்கும் அஜ்ஞானமுண்டாகி “முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலந்ததுவோ? அடிச்சோதி நீநின்ற தாமரை யாயலர்ந்துவோ?” என்று ஸம்சயிக்க நோந்தது; இவ்வளவே யன்றிக்கே ஸர்வஜ்ஞனான ஸர்வேச்வரனுங்கூட தம்முடைய ஹேயமான தேஹத்திலே ஆதரம் பண்ணும்படி நேர்ந்ததானது மயல்மிகு பொழில் சூழ்மாலிரஞ் சோலையில் வாஸத்தின் பலனே யென்று காட்டுகை ஒரு கருத்து; அப்படி அவன் தம்முடைய தேஹத்திலே பண்ணின ஆதரத்தைத் தவிர்த்துக்கொண்டதும் திருமாலிருஞ் சோலை வாஸத்தினால்தான்; அடியார்களுக்கு விதேயனாகைக்காகவே அர்ச்சாவதார பாரிக்ரஹமாகையாலே இதை ஆழ்வார் உணர்த்தவே ஆழ்வாருடைய கட்டளையை மீறலாகாதென்று கொண்டு தவிர்ந்தானாயிற்று; இதுவும் திருமாலிரஞ் சோலை வாஸத்தின் பலனே யென்று காட்டுகை மற்றொரு கருத்து. இப்பாட்டின் முன்னடிகளில் சொல்லப்பட்டிருக்கிற விஷயமே இப்பதிகத்திற்குப் பலன் என்று கொள்ளக்கடவது.
மான் ஆங்காரம் மனம் கெட-மஹான் அஹங்காரம் மநஸ்ஸென்று மூன்றைச் சொன்னது ப்ரகிருதிக்கும் உபலகூஷணம். சாரிரஸம்பந்தம் நசிக்கும்படியாக என்றபடி, ஐவர் வன்கையர் மங்க-வன்கையரான ஐவர் மங்க; பெருமிடுக்குடைய பஞ்சேந்திரியங்களும் மங்கும்படியாகவும் என்றபடி. கீழ்ப்பாட்டில் ஐந்தைந்தாகச் சொன்னவை யெல்லாவற்றுக்கும் உபலகூஷணமிது. ப்ரக்ருதி ப்ராக்ருதாத் மகமான தம்முடைய திருமேனியிலே நசைகெட்;டு என்றதாயி;ற்று. தான் ஆங்கார மாய்ப்புக்கு-என்னை யநுபவிக்கப் பெரிய செருக்கோடே வந்து புகுந்து என்றபடி. தானே தானே யானானே – நான் இரக்க வேண்டாதே தானே இரப்பாளனாகி யென்றவாறு. இப்படிப்பட்ட எம்பெருமானைக் குறித்து ஆழ்வராருளிச்செய்த ஆயிரத்துள்;
மானாங்காரத்து இவை பத்தும் – இதற்கு இரண்டுபடியாகப் பொருளளிருளிச் செய்வர்; -மஹான் அஹங்காரம் முதலியவற்றின் கூட்டரவான தேஹத்தை விட்டுத் தொலைப்பதற்காகச் சொன்ன இப்பதிகம் -என்றும், பெரிய செருக்கோடே சொன்ன இப்பதிகம் என்றும். ஆழ்வார் தம்முடைய உத்தேச்யம் தலைக்கட்டுகை அணித்து என்னுமத்தாலே பெரிய செருக்கு உண்டாகக் குறையில்லையே.
English Translation
This delightful decad of the thousand songs by Satakopan of honey-dripping Kurugur groves on the destruction of Mahat, Ahankara, Manas and the five senses, addresses the Malirumsolai Lord who entered me, and himself became me.
