(3955)

(3955)

பிரியாதாட் செய்யென்று பிறப்பறுத்தாள் அறக்கொண்டான்

அரியாகி இரணியனை ஆகங்கீண் டானன்று

பெரியார்க்காட் பட்டக்கால் பெறாதபயன் பெறுமாறு

வரிவாள்வாய் அரவணைமேல் வாட்டாற்றான் காட்டினனே.

 

பதவுரை

பிரியாது ஆள் செய் என்று

ஒருகணமும்  பிரியாதிருந்து அடிமை செய்யக் கடவாயென்று அநுக்ரஹித்து

ஆகம் கீண்டான்

உடலைப் பளிந்தவனாய் (அந்த சிரமம் தீர)

வாட்டாறு

திருவாட்டாற்றிலே

பிறப்பு அறுத்து அற ஆள் கொண்டான்

ஸம்ஸாரப் பற்றைப்போக்கி மிகவும் அடிமை கொண்டவனாய்

வாரி வாள் வாய் அரவு அணை மேலான்

சேஷசாயியாயிருக்கு மெம் பெருமான்

அன்று

முன்பொரு காலத்தில்

அர் ஆகி

நரசிங்க மூர்த்தியாகி

இரணியனை

இரணியாசுரனுடைய

பெரியார்க்கு ஆள்பட்டக்கால் பெறாத பயன் பெறும் ஆறு காட்டினள்

பெரியவர்களுக்கு அடிமைப்பட்டால் பெறுதற்காரிய பயனையும் பெற லாகுமென்பதைக்காட்டி விட்டான்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

****- பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாதபயன் பெறலாகும்’ என்றொரு பழமொழி யுண்டாம்; அதனைத் திருவாட்டாற்றெம்பெருமான் அநுஷ்டாந பரியவஸாயி யாக்கினானென்று ஆனந்தம் பொங்கி யருளிச் செய்கிறார்.  இப்போது தாம்பெற்ற பெறாதபயன் எது வென்னில்; இனியொரு நாளும் பிரியாதேயிருந்து அடிமை செய்யுமாறு சோதிவாய் திறந்து அருளிச்செய்த தொன்று;  இனிமேல் பிறப்பு நேராதபடி வேரோடறுத்த தொன்று; அடிமை செய்யென்று சொல்லி விட்டவளவேயன்றிக்கே கைங்காரியங் கொண்ட தொன்று – ஆகிய இவை பெற்ற பேறுகள்.  இவை எம்பெருமானுடைய நிர்ஹேதுகக்ருபையாலன்றி மற்றொன்றால் பெறமுடியாதவை யாதலால் பெறாதபய னென்றது.

இரண்டாமடிக்கு அவதாரிகை யிடுகிறார் நம்பிள்ளை – “இதுக்கு முன்பே தமக்குப் பண்ணிற்றோருபகாரத்தைச் சொல்லுகிறார்” என்று.  அரியாகி இரணியனை ஆகங்கீண்டதும் தமக்குப்பண்ணின உபகாரமென்றிருக்கிறாராம் ஆழ்வார்.  தாம் அநுபவிக்கைக்காகவே அவதாரங்கள் அமைந்த வென்று கருத்து.  இரண்டாமடியின் முடிவில் அன்று என்றிருப்பதனால், அன்று அவ்வுபகாரம் செய்தான்.  இன்று இவ்வுபகாரம் செய்தானென்று சொல்லுவதாக தேறுகிறதன்றோ; அன்று மின்றும் தமக்கே செய்ததாகத் தேறினாராயிற்று.

பெரியார்க்காட்பட்டாக்கால் பெறாதபயன் பெறலாமென்று எங்கே சொல்லியிருக்கிற தென்னில்; ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் ஷத்ரபந்துவின் உபாக்யானத்தில் – *மஹாத்மநாம் ஸம்ச்ரயமப்யுபேதோ தைவாவஸீதத்யதிதுர்க்கதோபி* என்றுள்ளது அதிதுர்க்கதோபி – மிகவும் வறியனாயிருந்தாலும், மஹாத்மநாம ஸம்ச்ரயம் அப்யுபேதா:- பெரியார்க்கு ஆட்பட்டானாகில், நைவ-அவஸீததி – மேன்மையையடைவனே யல்லது கீழ்மையை யடையமாட்டா னென்றபடி.  இப்பாசுரத்தைத் திருவுள்ளத்திற் கொண்டு தேசிகன் பாதுகாஸஹஸ்ரத்தில் பணித்ததொரு ச்லோகமும் நினைவுக்கு வருகின்றது – *அதாரிக்ருதோபி மஹதா தமேவ ஸேவேத ஸாதரம் பூஷ்ணு, அலபதஸமயே ராஜ்யம் பாதாக்ராந்தாபி பாதுகா சௌரே!* என்று.  “மஹா புருஷ ஸமாச்ரயணம் பண்ணினால் பின்னை அவர்கள், கொள்ளுகிறவன் சிறுமைபார்த்தல் கொடுக்கிற பொருளின் பெருமைபார்த்தல் செய்யாதே கொடுப்பார்களென்று இங்ஙனே நாட்டிலே யொன்றுண்டு; அத்தை என்பக்கலிலே காட்டினான்; ப்ரஹ்லாதாதிகளைக் கொண்டு திருவாய் மொழிபாடுவித்துக் கொண்டானோ?” என்பது ஈடு.

 

English Translation

The Lord in Tiruvattaru reclines on a hooded serpent.  He came as a lion and tore Hiranaya’s wide chest. He broke my cords of rebirth and made me his servant granting favours such as I have never had before

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top