(3934)

(3934)

பற்றென்று பற்றிப் பரம பரமபரனை

மற்றிண்டோள் மாலை வழுதி வளநாடன்

சொற்றொடையந் தாதியோ ராயிரத்து ளிப்பத்தும்

கற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே.

 

பதவுரை

பரம பரம்பரனை

பராத்பரனையும்

தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள்

அந்தாதித் தொடையான ஆயிரத்தினுள்

மல் திண் தோள்

மிடுக்குப் பொருந்திய திருத்தோள்களை யுடையனாயிமிருக்கிற

இப் பத்தும் கற்றார்க்கு

இப்பதிகத்தைப் பயின்றவர்களுக்கு

மாலை

ஸர்வேச்வரனை

பற்று என்று பற்றி

தமக்குப் புகலாக வுறுதி யிட்டு

கண்ணன் கழல் இணை ஓர் பற்று

கண்ணனது உபயபாதங்கள்

வழுதி வளநாடன் சொல்

ஆழ்வார் அருளிச்செய்த

ஆகும்

ஒப்பற்ற ப்ராப்யமாகும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

**** – இத் திருவாய்மொழியைக் கற்றார்க்கு எம்பெருமான் திருவடிகள் ஸுலபமாமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.  பரமபரம்பர னென்பதனால் ஸர்வேச்வரத்வஞ் சொல்லுகிறது; மல்திண்டோன்மா லென்பதனால் விரோதிகளைப் போக்குகைக் கீடான மிடுக்குடைமையும் அடியார் திறத்து வியாமோஹமுடைமையும் சொல்லுகிறது.

 

English Translation

This decad of the thousand songs by Valudi-land’s Kurugur Satakopan on the Lord of the celestials who has strong wrestling shoulders,  Offers shelter of his feet to those who can sing it

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top