(3882)
தொண்டர்நுந்தம் துயர்போகநீரேகமாய்
விண்டுவாடாமலரிட்டு நீரிறைஞ்சுமின்
வண்டுபாடும்பொழில் சூழ் திருக்கண்ணபுரத்
தண்டவாணன் அமரர்பெருமானையே.
பதவுரை
|
தொண்டர் |
– |
தொண்டர்களே |
|
வண்டு பாடும் பொழிழ் சூழ் |
– |
வண்டுகள் பாடுமிடமான் சோலைகளாலே சூழப்பட்ட |
|
திரு கண்ணபுரத்து |
– |
திருக் கண்ணபுரத்தி வெழுந்தருளியிருக்கிற |
|
அண்டம் வாணன் அமரர் பெருமானை |
– |
அகிலாண்ட கோடி ப்ரஹ மாண்டநாயகனான எம்பெருமானை |
|
தும் தம் துயர் போக |
– |
உங்களுடைய துக்கம் தொலையும்படி |
|
நீர் ஏகம் ஆய் |
– |
நீங்கள் அநந்ய ப்ரயோஜநர்களாய் |
|
விண்டு வாடா மலர் இட்டு |
– |
மலர்ந்து வாடாத (அப்போதலர்ந்த) பூக்களைப் பணிமாறி |
|
நீர் இறைஞ்சுமீன் |
– |
நீங்களே தொழுங்கள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***– திருக்கண்ணபுரத்திலே நின்றருளினவன் உபயவிபூதி நாதனாயிற்று; தொண்டர்களே உங்கள் துக்கங்கெட அநந்யப்ரயோஜநராய்க் கொண்டு ஆச்ரயியுங்கோளென்கிறார் தொண்டர்=இது அண்மைவிளி; தொண்டர்களே! என்றபடி. இளைய பெருமாளைப்போலே ஸகலவித கைங்கரியங்களையுஞ் செய்யப் பாரித்திருக்குமலர்களே யென்கை. நுந்தம் துயர்போக=துயர் ல்லார்க்கும் ஒரே வகையாயிராது; “ஸம்ஸாரிகளுக்கு விரோதி சத்ருபீடாதிகள்; முமுக்ஷீக்களுக்கு விரோதி தேஹஸம்பந்தம்; முக்தர்க்கும் நித்யர்க்கும் விரோதி கைங்கர்யஹானி ” என்று முமுக்ஷீப்படியிலருளிச் செய்த கட்டளையிலே தந்தாமுடைய விரோதிகள் தொலையும்படியாக வென்கை.
நீர் ஏகமாய்=நீங்களெல்லாரும் லகீபவித்தவர்களாய்க் கொண்டு; (அல்லது) நீங்கள் பலவகைப் பலன்களைக் கணிசியாதே பகவத் கைங்கரியமொன்றையே கணிசித்தவர்களாய்க் கொண்டு என்றுமாம். விண்டுவாடாமலரிட்டு இறைஞ்சுமின்=செவ்விப் பூவைக் கொண்டு ஆச்சயியுங்கோள். நீர் என்பது முதலடியிலும் இரண்டாமடியிலுமுள்ளது; இரட்டிப்பு–உங்கள் ஸ்வரூபத்தை நோக்க வேணுமென்று ஞாபம் செய்கிறபடி.
வண்டுபாடும் போழில்சூழ் = வண்டுகளைப் போலே ஸாரக்ராஹிகளான வர்த்திக்கிற தேசமென்றபடி. அண்டவாணன் அமரர்பெருமான்=உபயவிபூதிநாதனென்கிறது. அண்டவாணன் என்பதனால் லீலாவிபூதி நிர்வாஹகத்வம் சொல்லுகிறது.
English Translation
O Devotees, gather and offer worship with fresh unfading flowers. The Lord resides in Tirukkannapuram with bee-humming groves. He shall end your despairs individually
