(3857)
ஒழிலின்றித்திருமூழிக்களத்துரையு மொண்சுடரை
ஒழிவில்லாவணிமழலைக் கிளிமொழியாலைவற்றியசொல்
வழுவில்லாவண்குகூர்ச் சடகோபன்வாய்ந்துரைத்த
அழிவில்லாவாயிரத்து இப்பந்தும கோயனுக்குமே
பதவுரை
|
ஒழிவு இன்றி |
– |
நிரந்தரமாக |
|
திருமூழிக்களத்து உறையும் |
– |
திருமூழிக்களத்திலே வாழ்கிற |
|
ஒண் சுடரை |
– |
தேஜோமூர்த்தியான எம்பெருமானை |
|
ஒழிவு இல்லா அணி மழலை கிளி மொழி யாள் அலற்றிய சொல் |
– |
மபிரிந்து தரிக்கமாட்டாத வொரு மென்கிளிமொழித் தலைவி சொன்ன சொல்லாகவைத்து |
|
வழு இல்லாவண் குருகூர் சடகோபன் உரைத்த |
– |
அன்பில் குறைவில்ல தவரான ஆழ்வார் ஆழ்ந்து அருளிர் செய்க |
|
அழிவு இல்லா ஆயிரம் |
– |
நித்யவேதமான இவ்வாயிரத்தினுள் |
|
இப்பத்தும் |
– |
இப்பதிகம் |
|
நோய் அதுக்கும் |
– |
ஸம்ஸார வியாதியைத் தீர்த்துக் கொடுக்கும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***– இத்திருவாய்மொழியானது தன்னைப்பயிலுமவர்கட்கு பகவத்விச்லேஷ ஹேலுவான ஸம்ஸார வியாதியையறுக்கு மென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். திருமூழிக்களத்து ஒழிவின்றியையும் ஒண்சுடரை=எம்பெருமான் ராமகிருஷ்ண யவதாரங்கள் பண்ணியிருந்து ஒரு காலவிசேஷத்திலே தன்னடிச் சோதிக்கு எழுந்தருளியாகிறது. அர்ச்சாவதாரம் அப்படியன்றே. ‘ஸம்ஸாரம் கிழங்கெடுத்தலல்லது பேரேன்’ என்றிருக்குமிருப்பாகையாலே அழிவின்றியுறையு மென்கிறது. திருநாட்டில் விளங்கப்பெறாத திருக்குணங்களும் இருட்டறையில் விளக்குப்போலே பிரகாசிப்பது இங்கே யாதலால் ஒண்சுடரை என்றது.
இரண்டாமடியில் அணிமழலைக் கிளிமொழியாள் என்றது ஆழ்வார் தம்மையன்று எம்பெருமானைப் பிரிவில் தரிக்கமாட்டாத ஸ்வபாவையாயிருப்பாளொரு பிராட்டி அவனைப் பிரிந்து அவற்றின பாசுரத்தாலே, தத்ஸத்ருசஸ்வபாவரான வண்குருகூர்ச்சடகோபன் எம்பெருமானைப் பிரிந்தலற்றின இப்பத்து என்பது ஆறாயிரப்படிய்ருளிச் செயல்.
English Translation
This decad of the thousand songs by prosperous kurugur’s Satakopan praising with sweet parrot-like words the radiant Lord of Tirumulikkalam, will cure sickness
