(3737)

(3737)

இருந்தும், வியந்து என்னைத்தன் டிபான் அழக்கீழ், என்று

அருத்தித்து, எனைத்து ஓர் பல நாள் அர்த்தேற்கு,

பொருத்தம் உடை வாமன்ன் தான் புகுந்து, என் – தன்

கருத்தை உற, வீற்றிருந்தாள் – கண்டுகொண்டே.

 

பதவுரை

என்னை

அடியனை

வியந்து

திருவுள்ளமுவந்து

தன் பொன் அடி கீழ் இருத்தும் என்று

தன் திருவடிகளின் கீழே இருத்தியருள்வானாக வென்று

அருத்தித்து எனைத்தோர் பல நாள்

அனேக காலம் நாள்தோறும்

அழைத்தேற்கு

அழைத்துக் கூப்பிட்ட வென் விஷயத்தில்

பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து

ப்ராவண்யமுடையனான எம்பெருமான் தானே வந்து புகுந்து

என் தன் கருத்தை உற

என்னுடைய கருத்தைத் தானுடையனாய்க்கொண்டு

கண்டு கொண்டு

என்னையே பார்த்துக்கொண்டு

வீற்றிருந்தான்

எழுந்தருளியிரா நின்றான்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நான் அர்த்தியாய்க் கூப்பிட்டழைக்க விடாயெல்லாம் தீரும்படி. தான் அர்த்தியாய் என்னெஞ்சிலே பெறாப்பேறு பெற்றானாகப் புகுந்திராநின்றானென்கிறார். அடியேனைத் தன்னுடைய திருவடிகளின் கீழே சேர்த்துக் கொண்டருள வேணுமென்று அவனைப் பிரார்த்தித்து நான் பலகாலும் கதறிக் கொண்டிருந்தேன், என்னுடைய இரப்பு இப்படியிருக்க, தான் பண்டு மாவலிதன் பெருவேள்வியில் இரப்பாளனாய்ச் செற்றதுபோல இன்று என் பக்கலிலே, என்னுடைய அர்த்தித்வத்தைத் தான் ஏறிட்டுக் கொண்டு வந்து என்னுள்ளே புகுந்து, என்னைப் பெற்றதனாலுண்டான வேறுபாடு தன் வடிவிலே தோற்ற விருந்து க்ருத க்ருத்யனாய் நின்றான். (கண்டுகொண்டே வீற்றிருந்தான்) மஹா வ்யாதிக்குத் தப்பிப்பிழைத்த புத்திரனைப் பார்த்துக்கொண்டிருக்கும் பிதாபோலே, கீழே * மாயக்கூத்தாவென்னுந் திருவாய்மொழியிலாற்றாமைக்குத் தப்பிப்பிழைத்தவரென்று வைத்தகண் வாங்காதே பார்த்துக் கொண்டிராநின்றான்.

மூன்றாமடியில் பொருத்தமுடை யென்றது ஸாபிப்ராயம், ஐயோ! இவனையன்றோ நான் கீழே “இதுவோபொருத்தமே“ என்றேன் என்று நொந்து சொல்லுகின்றார்போலும்.

 

English Translation

I worshipped and called for many days fervently, and prayed that I be heard and bound to his feet. Lo, the beautiful Vamana noticed me.  He stole into my heart and made me his

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top