(3735)
அற்புதன் நாரா யணனரி வாமனன்,
நிற்பது மேவி யிருப்பதென் னெஞ்சகம்,
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்,
கற்பகச் சோலைத் திருக்கடித் தானமே.
பதவுரை
|
அற்புதன் |
– |
அத்புத சேஷ்டிதனாய் |
|
நாராயணன் |
– |
நாராயணனாய் |
|
அரி வாமனன் |
– |
ஹரியாய் வாமனனான எம்பெருமான் |
|
மேவி இருப்பது என் நெஞ்சகம் |
– |
பொருந்தியிருப்பது என்னெஞ்சினுள்ளே, |
|
நிற்பது |
– |
அதற்காகவந்து நிற்பது (எவ்விடத்திலென்னில்) |
|
நல் புகழ் வேதியர் |
– |
புகழ்மிக்க வைதிகருடைய |
|
நால் மறை |
– |
நான்கு வேதங்களும் |
|
நின்று அதிர் |
– |
நிலைநின்று முழங்கும்படியாய் |
|
கற்பகம் சோலை |
– |
கற்பகம் போன்ற மரங்கள் நிறைந்ததான |
|
திருக்கடித்தானம் |
– |
திருக்கடித்தானத்திலே |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஆழ்வார்தம்மைப் பெறுமளவும் எம்பெருமான் திருக்கடித்தானத்திலே நின்றருளினான், இவர்தம்மைப் பெற்று ஸம்ச்லேஷித்த பிறகு நிற்பதுமிருப்பதும் இவர்தம் நெஞ்சிலேயாயிற்று என்கிறது இப்பாட்டு.
அற்புதன் நாராயணன். அரி வாமணன் நிற்பது – (எங்கேயென்றால்) நற்புகழ்வேதியர் நான்மறை நின்றதிர் கற்பகன் சோலை திருக்கடித்தானமே, (அவன்றான்) மேவியிருப்பது (எங்கேயென்றால்) என்னெஞ்சகம் –என்றிங்ஙனே ஒரு அந்வயக்ரமம். நற்புகழ்வேதியர் நான்மறை நின்றதிர் கற்பகச் சோலைத் திருக்கடித்தானத்து அற்புதன். நாராயணன் அரிவாமனன் நிற்பதும் மேவியிருப்பதும் என்னெஞ்சகம் – என்றிங்ஙனே மற்றோரந்வயக்ரமம். மூன்றாவதான வொரு யோஜனையுமுண்டு, அற்புதன் நாராயணன் அரி வாமனன் நிற்பதும் மேவியிருப்பதும் என்னெஞ்சகத்திலும் திருக்கடித்தானத்திலும் – என்று.
English Translation
The wonder-Lord Narayana-Hari, is Vamana residing in my heart. The sound of Vedic chants reverberates through the groves of kalipa trees in Tirukkadittanam
