(3723)

(3723)

இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய். ஏறும் இருஞ்சிசிறைப்புள்,

அதுவே கொடியா வுயர்த்தானே! என்றென் றேங்கி யழுதக்கால்,

எதுவே யாகக் கருதுங்கொல் இம்மா ஞாலம் பொறைதீர்ப்பான்,

மதுவார் சோலை யுத்தர மதுரைப் பிறந்த மாயனே?

 

பதவுரை

மின் ஆழி படை யாய்

ஒளி பொருந்திய திருவாழியைப் படையாக வுடையவனே!

ஏறும் இரு சிறைபுள் அதுவே கொடி ஆ உயர்த்தானே

வாஹனமானவனும் பெரிய சிறகையுடையவனுமான பெரிய திருவடியையே கொடியாக எடுத்தவனே!

இதுவோ பொருத்தம் என்று என்று

இப்படி உபேக்ஷிப்பதோ பொருத்தம் என்று பல காலுஞ் சொல்லி

ஏங்கி அழுதக்கால்

பொருமியழுதால்,

இ மா ஞாலம் பொறை தீர்ப்பான்

இப்பெரிய நிலவுலகின் பாரத்தைப் போக்குகைக்காக

மது வார் சோலை உத்தா மதுரை பிறந்த மாயன்

தேன் வெள்ளமிடாநின்ற சோலைகளையுடைய வடமதுரையிலே பிறந்த மாயப் பெருமான்

எதுவே ஆக கருதும் கொல்

என்ன திருவுள்ளம்பற்றி யிருக்கிறபடியோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஒருவர் தப்பாமல் எல்லாருடைய ஆர்த்திகளையும் போக்கி ரக்ஷித்தருளுகைக்காக வடமதுரையிலே வந்து திருவ்வதாரம் பண்ணியருளின ஆச்சர்ய குணசாலியான கண்ணபிரான், தன்னைக் காணவாசைப்பட்டு நோவுபடுகிற வென்திறத்திலே என்ன செய்வதாக நினைத்திருக்கிறானோ வென்று தம்முடைய ஸ்ருதயத்துக்குள்ளே தாம் சிந்திக்கிறபடியை வெளியிடுவது இப்பாட்டு. கீழ்ப்பாட்டில் பஞ்சபாண்டவர்களுக்கு உதவினபடியைச் சொல்லிக் கூப்பிட்டார், அவர்களுக்கு உதவினபடி கிடக்கட்டும், திருவாழியாழ்வான் பெரிய திருவடி முதலானாரோடு கலந்து பழகுகிற பொருத்தமும் இவ்வளவேயோ என்கிறார் என்னவுமாம்.

இதுவோ பொருத்தம் – இப்படி கூப்பிடச் செய்தேயும் வரக் காணாமையாலே கண்ணாஞ் சுழலையிட்டு மீண்டும் “இதுவோ பொருத்தம்“ என்கிறார். மின்னாழிப்படையாய்!  மேகத்திலே மின்னல் மின்னினாப்போலே மின்னாநின்ற திருவாழிப்படையை யுடையவனே யென்றது – அத்திருவாழியாழ்வானோடு பொருந்தி வர்த்திப்பதும் என்னோடு பொருந்தியிருக்கும்படி. அத் திருவாய் மொழியாழ்வானோடு பொருந்தி வர்த்திப்பதும் என்னோடு பொருந்தியிருக்குமளவோயோ? என்கிறாராகவுமாம். ஏறுமிருஞ் சிறைப்புள்ளதுவே கொடியாவுமர்த்தானே! – நீ வந்து சேர நினைத்தால் அருமையுண்டோ? ஒரு நொடிப்பொழுதில் கொண்டு சேர்க்கவல்ல பரிகரமில்லையோ என்றவாறு. * தாஸஸ் ஸகா வாஹநமாஸநம் த்வஜோ யஸ் தே விதாநம் வ்யஜநம் * என்று ஸ்தோத்ராத்னத்தி லருளிச் செய்தபடியே பெரிய திருவடிபக்கலில் வல வகையடிமைகளையுங் கொள்வதாகச் சொல்லப்படுவதும் இப்படிதானோ? என்னோடு எவ்வளவு பொருத்தமோ அவ்வளவு பொருத்தந்தானோ அவனோடும்? என்று கேட்கிறபடியாகவுமாம். என்றென்றேங்கி யழுதக்கால் எதுவேயாகக் கருதுங்கொல் – இப்படிச் சொல்லிச் சொல்லிப் பொருமியழுதால் இக்கூப்பீட்டுக்கு முகங்காட்ட நினைக்கிறானோ? இப்படியே கூப்பிட்டுக் கொண்டு கிடக்கட்டு மென்றிருக்கிறானோ? (இம்மாஞாலம் இத்யாதி) மண்ணின் பாரம் நீக்குதல் என்றொரு வியாஜமிட்டு இங்கேவந்து பிறந்து ஸாதுபரித்ராணம் பண்ணிப் போருகிறவன் நம்கூப்பீட்டுக்கு என்ன நினைத்திருக்கிறானோ வென்கிறார். மாயனே! என்றவிடத்து ஏகாரம் விளியுருபன்று, ஈற்றகை.

 

English Translation

I weep and call in despair, O Lord of lightning-discus, O Lord of Garuda-banner!  Alas, what indeed does he intend?  Did he not appear in the beautiful groves of Mathura and rid the world of its miseries?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top