(3710)

(3710)

திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள் கண்டவத் திருவடி யென்றும்,

திருச்செய்ய கமலக் கண்ணூம்செவ் வாயும் செவ்வடி யும்செய்ய கையும்,

திருச்செய்ய கமல வுந்தியும் செய்ய கமலமார் பும்செய்ய வுடையும்,

திருச்செய்ய முடியும் ஆரமும் படையும் திகழவென் சிந்தையு ளானே.

 

பதவுரை

திருச்செங்குன்றூரில திருச்சிற்றாறதனுள் கண்ட அத்திருவடி

திருச்சிற்றாற்றுப்பதியிலே நான் காணப்பெற்ற அந்த பொருமானானவன்,

செய்ய கமலம் திருக்கண்ணும்

செந்தாமரை போன்ற திருக்கண்ணும்

செம் வாயும்

சிவந்த திருப்பவளமும்

செம் அடியும்

சிவந்த திருவடிகளும்

செய்ய கைவும்

சிவந்த திருக்கைகளும்

செய்ய கமலம் திரு உந்தியும்

சிவந்த கமலத்தையுடைத்தான திருநாபியும்

கமலை செய்ய மார்பும்

பெரிய பிராட்டியாரை யுடைத்தாய்ச் சிவந்ததான திருமார்வும்

செய்ய உடையும்

திருப்பிதகவாடையும்

ஆரமும்

கோலமாமணியாரங்களும்

படையும்

திவ்யாயுதங்களும்

திகழ

விளங்க

என்றும் என் சிந்தை உளான்

எந்நாளும் என்னெஞ்சினுள்ளே யுறைகின்றான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருச்சிற்றாற்றெம்பெருமானுடைய வடிவழகை வாயரப் பேசுகிறாரிதில் அழகு பொருந்திச் சிவந்தவையாய், விகாஸம் செவ்வி முதலானவற்றால் தாமரையையொத்திருப்பவையான திருக்கண்களும், அத்திருக்கண்ணோக்காலே பிறந்தவுறவை ஸ்வாபித்துக் கொள்ளும் புன்முறுவல் பொலிந்த திருப்பவளமும், அந்தப் புன்முறுவலுக்குத் தோற்றவர்கள் விழுந்து வணங்கத் தக்க திருவடிகளும், திருவடிகளில் விழுந்தவர்களை யெடுத்தணைக்கும் திருக்கைகளும், அப்படி அணைக்கப்பெற்றவர்களும் நித்யமும் அநுபவிக்கத் தக்கதாய் அழகுக் கெல்லையாய் ஸர்வோத்பத்திஸ்தானமென்று தோற்றும்படியிருக்கிற திருநாபியும், பகவத்ஸம் பந்தமில்லாதவர்களுக்கும் பற்றாசான பிராட்டிக்கு இருப்பிடமாய்க் கொண்டு சிவந்திருக்கின்ற திருமார்வும், திருமேனிக்குப் பரபாகமான திருப்பீதாம்பரமும், அச்சம் தீரும்படி ரக்ஷகத்வ ஸூசகமாயிருந்துள்ள திருவபிஷேகமும் திவ்யாயுதங்களும் விளங்க என்றும் என்சிந்தையிலே வர்த்திக்கையாலே அச்சம் தலைகாட்ட வழியில்லை யென்றாராயிற்று.

 

English Translation

I see the lustrous Lord standing in Tirucchengunur with lotus eyes, lotus feet, lotus hands, lotus navel, and lotus chest, coral lips and red garments, and an auspicious red crown; his radiant form with ornaments and five weapons fills my heart

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top