(3648)
ஆம்வண்ண மின்னதொன் றென்றறி வதரி யஅரியை,
ஆம்வண்ணத் தால்குரு கூர்ச்சட கோபன் அறிந்துரைத்த
ஆம்வண்ண வொண்டமிழ்களிவை யாயிரத் துளிப்பத்தும்,
ஆம்வண்ணத் தாலுரைப்பாரமைந் தார்தமக்கென்றைக்குமே.
பதவுரை
|
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று |
– |
இன்னபடிப் பட்டிருப்பதொரு ஸ்வபாவ மென்று |
|
அறிவது அரிய அரியை |
– |
(ஒருவராலும்) அறிய முடியாத ஸர்வேச்வரனை |
|
குருகூர் சட கோபன் |
– |
நம்மாழ்வார் |
|
ஆம் வண்ணத்தால் அறிந்து உரைத்த |
– |
உள்ளபடியறிந்து அருளிச் செய்த |
|
ஆம் வண்ணம் ஒண்தமிழ்கள் இவை ஆயிரத்துள் |
– |
தகுதியான சந்தஸ்ஸையுடைய அழகிய தமிழினாலான இவ்வாயிரத்துள் |
|
பத்தும் |
– |
இப்பதிகத்தை |
|
ஆம் வண்ணத்தால் உரைப்பார் |
– |
இயன்றவளவு சொல்ல வல்லவர்கள்;. |
|
என்றைக்கும் |
– |
ஆத்மாவுள்ளவரைக்கும் |
|
தமக்கு அமைந்தார் |
– |
க்ருதக்ருத்யர்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
(ஆம்வண்ணம்) ஒருவராலும் ஒரு வகையுமறியவொண்ணாத எம்பெருமானை உள்ளபடியே யறிந்து அவனுக்கு ஏற்றவாறு ஆழ்வா ரருளிச் செய்த ஆயிரத்தினுள்ளும் இத்திருவாய்மொழியை யதாசக்தி பயிலுமவர்கள் என்றைக்கும் க்ருதக்ருத்யரென்று அவர்களைச் சிறப்பித்துக் கூறுகிறபடி. க்ருதக்ருத்யதா ப்ராப்தியே பல னென்று பயனுரைத்தவாறு.
முதலடியில், எம்பெருமானுடையபடி இன்னதென்று ஒருவராலுமறிய வொண்ணாதது என்று கூறியிருப்பது பொருந்துமோ? அவனுடைய படிகளைப் பரக்கப் பேசுவதற்கன்றோ சாஷஸ்தரங்கள் தோன்றியுள்ளன; அவைதாம் அவனுடைய படிகளை நிஷ்கர்ஷித்துக் கூறியிருக்கவில்லையோ? என்று சிலர் சங்கிக்கக்கூடும். இஃது படிகளை உண்மையே; பிராட்டியை புருஷகாரமாகக் கொண்டு என்னை யடிபணிவார்க்கு நான் ப்ராப்யன் என்று பல விடங்களிற் கூறுமெம்பெருமானே ஓரிடத்தில் ‘நாஸெளா புருஷகாரேண நசாப்யந்யேந ஹேதுநா, கேவலம் ஸவேச்சயைவாஹம் ப்ரேசேஷகசித் கதாசந” என்கிறான். புருஷகாரபலத்தைக் கொண்டும் மற்று எந்த ஸாதனங் கொண்டும் என்னை வசப்படுத்தமுடியாது; எனக்காகத் தோன்றுகிற போது நானாகவே ஒரு அதிகாரி விசஷேத்தைத் திருவுள்ளம்பற்றுவேனத்தனை—என்பது இந்த ச்லோகத்தின் கருத்து, இங்ஙனமே மற்றொன்றும் காணலாம் ச்ருதிஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா யஸதாமுல்லங்க்ய வர்க்ததே, ஆஜ்ஞாச்சேதீ மமத்ரோஹீ மத்பக்தோபி ந வைஷ்வண. என்கிற எம்பெருமான் தானே அபிசேத் ஸூதுராசார: பஜதேமாம் அநந்யபாக், ஸாதுரேவ ஸமந்தவய: ஸம்யக்வ்யவஸிதோஹிஸ என்றும். மித்ரபாவேநஸம்ப்ராபதம் என்றுமருளிச்செய்கிறான். தன்னுடைய கட்டளையான ச்ருதிஸம்ருதிஸரணிகளைக் கடந்து துஷ்டனானவன் தன்னளவில் எவ்வளவு பக்தி செய்யினும் பயனில்லை, தனக்கு அவன் த்ரோஹியே ஒரிடத்தில் சொல்லிவைத்து, மற்றும் பலவிடங்களில், எவ்வளவு துஷ்டனானவனும் தன்னைக்கபடமாகவாவது அடிபணிந்தானாயின் அவனை என்னோடொப்ப் பஹூமானிக்கக்கடவது என்று சொல்லிவைக்கிற னெம்பெருமான். எதை நம்புவது?
ஆனாலும் சாஸ்த்ரார்த்தம் இப்படி பரஸ்பரம் வ்யாஹதமாயிருக்குமோ? சாஸ்த்ரத்தை உந்மத்த் ப்ரலபிதமதக்கவொண்ணுமோ? ஒன்றோடொன்று முரண்படாதபடி ஸமந்வயம் செய்து பொருத்தவல்ல மஹான்களில்லையோ? ஸமந்வயம் செய்திருக்கவில்லையோ வென்னில்; ஏன் இல்லை; ஸமந்தவயம் பெறாதது எதுவுமில்லை. ஆனால் அல்ப ப்ரஜ்ஞர்களுக்கு ஸமந்வயம் அஸாத்யமாகையாலே அதையிட்டு “ஆம்வண்ணமின்னதொன்றென்று அறிவதரியவரியை” என்கிறது. முதலடியிலே இப்படி சொல்லிவைத்து உடனே இரண்டாமடியிலே “குருகூர்ச் சடகோபன் ஆம்வண்ணத்தாலரறிந்துரைத்த” என்றதன்றோ. இதனால் ஆழ்வார்போன்ற மயர்வற மதிநல மருளப் பெற்றார்க்கு அறியவரியனல்லன் என்பத காட்டப்பட்டது. பத்துடையடியவர்க்கெளியவன் பிறார்களுக்கரிய வித்தகன் ஸமாஹிதை: ஸாது ஸநந்தநாதிபி: ஸூதுர்லபம் பக்தஜதை ரதுர்லபம் என்றாற்போல.
அமைந்தார் தமக்கு என்றைக்கும் என்றது- காலமுள்ளதனையும் தங்களுக்கு வேண்டிய அநுபவத்திற்குத் தாங்கள் குறையற்றவர்களென்றபடி. அதாவது ஸ்வயம் த்ரதக்ருத்மர்கள் என்கை. இங்கே நம்பிள்ளை யீடு காண்மின்;-“அவர்களுக்கு இவ்வாத்மா வுள்ளதனையும் ஈச்வரம முழங்கைத் தண்ணீர் வேண்டா, ஆழ்வார்பரிக்ரஹமானதுவே போரும். என்றைக்கும் தந்தாமுக்குத் தாமே யமைந்தார்களாயிருப்பர்கள்.”
English Translation
This decad of the thousand radiant songs by kurugur Satakopan on the Lord who cannot be described as this or that, -those who master it will become devotees of Hari
