(3569)
குலமுத லிடும்தீ வினைக்கொடு வன்குழியினில் வீழ்க்கும் ஐவரை
வலமுதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்,
நிலமுத லினீவ் வுலகுக்கும் நிற்பன செல்வன என,பொருள்
பலமுதல் படைத்தாய்! என் கண்ணா! என் பரஞ்சுடரே!
பதவுரை
|
நிலம் முதல் |
– |
பூமி முதலாக |
|
இனி எவ்வுலகுக்கும் |
– |
மற்றும் ஸகல லோகங்களுக்கும் |
|
நிற்பன செல்வன என |
– |
ஸ்தாவர ஜங்கம ரூபமான |
|
பொருள் பல |
– |
பொருள்கள் பல வற்றையும் |
|
முதல் படைத்தாய் |
– |
முன்னம் படைத்தவனே! |
|
என் கண்ணா |
– |
என் கண்ணனே! |
|
என் பரம் சுடரே |
– |
என் பரஞ்சோதிவடிவனே!, |
|
குலம் |
– |
குலத்தை |
|
முதல் அடும் |
– |
வேரோடே முடிக்கவல்ல |
|
தீவிகளை |
– |
பாபங்களை விளைக்கவல்ல |
|
கொடு வன்குழியினில் |
– |
(சப்தாதி விஷயங்களாகிற) படுகுழியதிலே |
|
வீழ்க்கும் ஐவரை |
– |
தள்ளக்கூடிய பஞ்சோத்திரியங்களை |
|
வலம் முதல் கெடுக்கும் வலமே |
– |
மூல பலத்தோடே முடிக்கும் படியான மிடுக்கை |
|
தந்தருள் கண்டாய் |
– |
அநுக்ரஹித்தருள வேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- விஷயங்களிலே ஆத்மாவைத் தள்ளும் இந்திரியங்கள் என்னை நலியாத படி பண்ணவேணும் என்று இரக்கிறார்.
குலமுதடுந்தீவனை-ஒருவன் பண்ணின பாபம் அவனொருவனோடே போகையல்லாமல் குலமாக முடிக்க வல்லவையான பாவங்களை விளைக்க கூடியதாய். கொடியதாய், அநுபவித்து முடியவொண்ணாதபடியாயிருக்கிற குழியிலேதள்ளி ஹிம்ஸிக்கின்றவர்களாம் ஐவர்; அவர்கள் தாம் பஞ்சேந்திரியங்களென்று பேர்பெற்ற மஹாநுபாவர்கள். அந்தப் பெருமிடுக்காளருடைய மிடுக்கை முதலிலே முடிக்கக் கடவதான உன்னுடைய அநுக்ரஹத்தைப் பண்ணியருள வேணுமென்கிறராயிற்று முன்னடிகளில். இங்குக் குழியென்றது சப்தாதி விஷயங்களை.
இவ்விடத்து ஈடுமுப்பத்தாறாயிரத்திலும் இருப்பத்துநாலாயிரத்திலும்-“ நஹி தர்ம விருத்தேஷூ பஹ்வபாயேஷூ கர்மஸூ , மூலகாதிஷூ ஸஜ்ஜந்தே புத்தி மந்தோ பவத்விதா: என்றானிறே மால்யவானுடையதாக ஸ்ரீராமாயணத்தில் இப்போதுள்ள பதிப்பு ஒன்றிலும் காணப்படவில்லை; திருவடியின் வார்த்தையாகக் காணகிறது. ஆகவே இங்கு நேர்ந்திருக்கும் பிறழ்வு குறிக்கொள்ளத் தக்கது.
நிலமுதலினி இத்யாதி. பிரானே! நீ ஜகத் ஸ்ருஷ்டி முதலியவற்றைச் செய்கிறபோது உனக்கு ஆரேனும் துணைபுரிந்ததுண்டோ? ஸங்கல்ப மாத்திரத்தையே துணைகொண்டன்றோ செய்தாய். ஸ்ருஷ்டிக்கு ப்ரயோஜனம் மோக்ஷமன்றோ. அது பெறவேண்டாவோ? பூமி முதலாக மற்றும் இப்படியுண்டான எல்லாவுலங்களாலும் ஸ்தாவரஜங்கமங்களான பல பதார்த்தங்களையும் முன்பே யுண்டாக்கினாய்; அப்படிப் பொதுமான ரக்ஷ்ணம் செய்ததமாத்திரமே யல்லாமல் கண்ணபிரானாய் வந்தவதரித்து ஒருநாடாக வடிவழகை அநுபவிப்பித்தாய்; அவ்வழகை நானொருவந்தவதரித்து அநுபவிக்கும்படியும் உதவினாய்; இத்தனையுஞ் செய்தவுனக்கு இந்தப் பஞ்சேந்திரியப் பாவிகளிடத்தினின்று மீட்டு ரக்ஷிக்கை அரிதாயிற்றோ? என்றாராயிற்று.
இரண்டாமடியில் “வலமே தந்து” “வரமே தந்து” என்பன பாடபேதங்கள்.
English Translation
These five senses can fell even the gods into the shin-pit, My Krishna, my radiant effulgence, you made this Earth, and all the worlds, the standing, the moving, and the things, Grant to destruction of the five, their strength and all, heed me
