(3483)
காண்மின்க ளுலகீர் என்று கண்முகப் பேநிமிர்ந்த,
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன,
ஆணையா யிரத்துத்திரு விண்ணகர்ப்பத் தும்வல்லர்,
கோணையின்றி விண்ணோர்க் கொன்றுமாவர்குரவர்களே.
பதவுரை
| உலகீர் |
– |
உலகத்திலுள்வர்களே! |
| கரண்மின்கள் என்று |
– |
இந்த விநோதத்தைக் காணுங்கோள் என்று (சொல்பவன் போன்று) |
| கண் முகப்பே நிமிர்ந்த |
– |
கண்ணெதிரே ஓங்கி வளர்ந்த |
| தான் இணையன் தன்னை |
– |
உபயபாதங்களை யுடையவனான எம்பெருமான் விஷயமாக |
| குருகூர் சடகோபன் சொன்ன |
– |
நம்மாழ்வார் அருளிச் செய்த |
| ஆணை ஆயிரத்து |
– |
பகவதாஜ்ஞா ரூபமான ஆயிரத்தினுள்ளும் |
| திரு விண்ணகர் பத்தும் வல்லார் |
– |
திருவிண்ணகர் விஷயமான இப்பதிகத்தை ஓத வல்லவர்கள் |
| விண்ணோர்க்கு |
– |
நிர்யஸூரிகளுக்கு |
| கோணை இன்றி மிறுக்கு இல்லாமல் | ||
| என்றும் குரவர்கள் ஆவர் |
– |
எப்போதும் கௌரவிக்கத்தகுந்தவராவர்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (காண்மின்கள்) இத் திருவாய்மொழியை அதிகரிக்கவல்லவர்கள் நித்யஸூரிகளுக்கும் கௌரவிக்கத் தகுந்தவராவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். இப் பதிகமானது * காண்மின்களாலகீரென்று கண்முகப்பே நிமிர்ந்த தாளிணையன்தன்னைக் குறித்து அருளிச்செய்ததாகத் தகும், ஏனெனில், மாவலியை வடிவழகாலும் பேச்சில் இனிமையாலும் மயக்கினதுபோல இருக்கும் மயக்கித் தன் காரியத்தை ஸாதித்துக் கொண்டதனால்.
ஆணையாயிரம் – •••• ஸ்ம்ஸ்க்ருத வேதமானது எப்படி பகவதாஜ்ஞாரூபமமோ அப்படியே இத் தமிழ்வேதமும் என்க.
விண்ணோர்க்கு என்றும் குரவர்களாவர் – இத் திருவாய்மொழியை ஓதுமவர்கள் நித்ய ஸூரிகளுக்குக் குரவர்களாகையாவது என்னென்னில், – * பாவியேனைப் பல நீ காட்டிப்படுப்பாயோ என்னும்படியான இருள்தருமாஞலத்தில் இருந்துகொண்டே இவர்கள் இப்படி பகவத் குணாநுபவம் பண்ணப் பெறுகின்றார்களே! இதுவன்றோ ஆச்சரியம்! நாம் * நலமந்தமில்லை தோர்நாட்டிலே யிருந்துக்கொண்டு குணுநுபவம் பண்ணுவதில் என்ன விசேஷம்? நம்மிற்காட்டில் இவர்களேயன்றோ சீரியர்கள்! என்று கொண்டாடப்பெறுதலாம். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி – “ஸம்ஸாரத்தேயிந்துவைத்தே நம்படி ஒருவனுக்கு உண்டாவதே! என்று (நித்யஸூரிகள்) கொண்டாடியிருப்பர்கள்.“
English Translation
This decad of the thousand songs, by kurugur Satakopan addresses the Lord of Tiru-vinnagar who grew before our eyes when he came begging as a lad and said, “Behold, O Ball”. Those who can sing it with mastery will become Gurus to the gods.
