(3472)

(3472)

ஆய்ச்சி யாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள், சீற்ற முண்டழு

கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்,

ஏத்திய தமிழ்மாலை யாயிரத்துள் இவையு மோர்பத் திசையோடும்,

நாத்தன்னால் நவில வுரைப்பார்க் கில்லை நல்குரவே.

பதவுரை

அன்று

பண்டொருகாலத்தில்
வெண்ணெய் வார்த்தையுள்

வெண்ணெய்களவு ஸம்பந்தமான ப்ரஸ்தாவம் வந்தவளவிலே
ஆய்ச்சி ஆகிய அன்னையால்

இடைக்குலத்துகித்த யசோதை யாகிய தாயாலே
அழு கூத்தன்

அழுகையாகிற கூத்தைச் செய்தவனான
அப்பன் தன்னை

ஸ்வாமியைக் குறித்து
குரு கூர் சடகோபன்

ஆழ்வார்
ஏத்திய

ஸ்தோத்ர்ரூபமாகச் செய்த
தமிழ் மாலை ஆயரத்துள்

தமிழ்த் தொடையான ஆயிரம் பாசுரங்களில்
இவையும் ஓர் பத்து

இப்பத்துப் பாசுரங்களை
இசையொடும் இசையோடு கூட
நா தன்னால் நவில உரைப்பார்க்கு

நாவினாலே செறியச்சொல்லுமவர்களுக்கு
நல்குரவு இல்லை

பகவதநுபவம் கிடையாமையாகிற தாரித்ரியம் இல்லையாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (ஆய்ச்சியாகிய) இப்பதிகம் கற்றார்க்குப் பலனுரைத்துத் தலைக்கட்டுகிறது. ‘எங்கள் கோஷ்டியிலே நீ சேரவரவேண்டா‘ என்று சொல்லிக் கதவடைத்தபோது கண்ணனுக்கு உண்டான துக்கமானது * மத்துறுகடை வெண்ணெய் களவினில் உரவிடையாப்புண்டு உரலினோடிணைந்திருந்து எங்கினபடிக்கு ஒக்கும் என்று காட்டுதற்காக ‘ஆய்ச்சியாகியவன்னையாலன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழுகூத்தவப்பன்தன்னை‘ என்று விசேஷித்தது அன்று யசோதைப்பிராட்டி அழப்பண்ணினதும் அதிஸ்நேஹகார்யம், இன்று காதலிகள் அழப்பண்ணினதும் அதிப்ரணய கார்யம் என்க.

வெண்ணெய் களவுகண்டதற்காகக் கட்டியடிக்க அழுதான் என்னாமல் வெண்ணெய் வார்த்தையுள் அழுதானென்று மூலம்மைந்திருக்கிற ஸ்வாரஸ்யத்தை நோக்கி ஈட்டிலே அருளிச்செய்கிறபடி பாரீர் –“ஊரிலே வெண்ணெய்களவு போயிற்று என்றார்கள், அவ்வளவிளே நாமிறே இதுக்கிலக்கு என்று அழப்புக்கான். மடம் மெழுகுவார் ஆர்? என்ன, அச்ரோத்ரியன் என்றார்கள், இப் பரப்பெல்லாம் என்னாலே மெழுகப்போமோ என்றான், அதுபோலே.

ஒரு பெரிய சத்திரத்தைக் கண்டவளவிலே இவ்வளவு பெரிய சத்திரத்தை யார் மெழுகுவது? என்று வார்த்தை யுண்டாயிற்று, எவனோவொரு விதவா புத்ரன் மெழுகுகிறான் என்று பொதுவிலே ஒருவன் சொன்னான், அந்தத் திரளிலே மெய்யாகவே ஒரு விதவாபுத்திரன் இருந்து அவன் காதிலே இந்த வார்த்தை விழுந்தது, ஐயோ! இவ்வளவு பரப்பு என்னாலே மெழுகப்போமோ? என்று அவன் அழுதானாம். அதனாலே தன்னுடைய அவத்யத்தைத் தானே வெளியிட்டுக்கொண்டானாயிற்று. அதுபோலே வெண்ணெய் களவு ப்ரஸங்கமாத்ரத்தில் அழுத கண்ணனும் தன்னுடைய களவைத் தானே வெளியிட்டுக் கொண்டானென்கை.

குருகூர்ச்சடகோனேத்திய என்ற விசேஷணம் ஆயிரத்துக்குமாகலாம். இப்பத்துக்குமாகலாம். இப்பதிகம் ஊடிப்பேசினதே யன்றி எத்தியதன்றே என்று நினைக்கவேண்டா, ஏத்துவில் இதுவும் ஒரு ப்ரகாரபேதமேயென்க. பக்தியானது ப்ரணயமாகமாறி ப்ரணயத்தின் பரீவாஹரூபமாகவன்றோ இது நிகழ்ந்தது.

இப் பதிகத்தை உரைக்குமவர்கட்கு நல்குரவு இல்லை – தாரித்ரியமில்லை, சோறுகூறைளெல்லாம் ஸம்ருத்தியாகக் கிடைக்குமென்கிறதன்று, * உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாங் கண்ணன் என்றிருக்கிற இவர் திருவாக்கினாலே “நல்குரவுஇல்லை“ யென்றால் பகவதநுபவத்தில் குறைபாடு உண்டாகாது என்பதன்றோ பொருளாகக் கடவது.

English Translation

This decad of the thousand songs sung with music by kurugur satakopan on the Lord who stole butter and was punished by the cowherd-mother, -those who mater it will be freed of poverty.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top