(3459)

(3459)

அடிகள் கைதொழு தலர்மேல் அசையும் அன்னங்காள்,

விடிவை சங்கொலிக் கும்திரு வண்வண் டூருறையும்,

கடிய மாயன்தன் னைக்கண்ணனை நெடு மாலைக்கண்டு,

கொடிய வல்வினை யேன்திறம் கூறுமின் வேறுகொண்டே.

பதவுரை

அலர் மேல் அசையும் அன்னங்காள்

பூவின் மேலேயிருந்து உலாவுகின்ற அன்னங்களே!
விடிவை

ஸுப்ரபாதகாலத்திலே
சங்கு ஒலிக்கும்

சங்கு முழங்கப்பெற்ற
திரு வண்வண்டூர்

திருவண்வண்டூரிலே
உறையும்

எப்போதும் வாழ்கின்ற
கடிய மாயன் தன்னை

கடுமையான மாயச் செயல்களையுடையனாய் அடியார்களுக்கு விதேயனாய்
நெடு மாலை

அடியார்பக்கலிலே மிகவும் வியாமோஹ முடையவனாயிருக்கிற எம்பெருமானை
கண்டு

சேவித்து
அடிகள் கை தொழுது

திருவடிவாரத்திலே அஞ்ஜலிபண்ணி
கொடிய வல் வினையேன் திறம்

மிகக்கொடிய பாபத்தையுடையேனான என் விஷயமாக
வேறு கொண்டு

ஏகாந்தமாக
கூறுமின்

புருஷகாரமான வார்த்தைகளைச் சொல்லுங்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (அடிகள் கைதொழுது) சில அன்னப்பறவைகளை நோக்கி ‘திருவண்வண்டூரெம் பெருமானிடத்துச்சென்று ஏகாந்தமாக என் விஷயம் விஜ்ஞாபிக்கவேணும்‘ என்று இரக்கிறாள். ‘திருவடிகளைச் சிக்கனப்பிடித்துக் கொண்டு‘ என்று சொல்லவேண்டிய ஸ்தானத்திலே அடிகள் கைதொழுது என்கிறாள். இது உபசாரோக்தி. “அநதிக்ரமணீயம் ஹி சரணக்ரஹணம்“.

“என்றபடி திருவடிகளைப்பிடித்துக் கொண்டால் மறுக்கப்போகாதாகையாலே அந்த உபாயத்தை உபதேசித்தபடி.

கடியமாயன் – ஆச்ரிதவிரோதிகளை அழியச் செய்யுமிடத்தில் கண்பாரத ஆச்சரியச் செயல் செய்பவன். கண்ணன் – ஆச்ரிதர்க்குதான் கையாளாக நின்று தன்னைக்கொடுக்குமவன். நெடுமால் – இத்தனையும் செய்தும் “அந்தோ! ஒன்றும் செய்யப்பெற்றிலோமே! என்று குறைபடும்படியான வியாமோஹமுடையவன்,

ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை கோஷ்டியாக இருக்கிற சமயத்திலே சென்று கிட்டாமல் ஏகாந்தமாயிருக்கிற ஸமயத்திலே சென்று கிட்டி, நாட்டார்படியல்லாத பாபத்தைப்பண்ணின என்னுடைய செய்தியைச் சொல்லுங்களென்கிறாள்.

வேறு கொண்டு என்றது – ஏகாந்தத்திலே என்றபடி. பிராட்டியும் தானுமாயிருக்கிற இருப்பிலே என்கை.

English Translation

O Dainty swans dallying over flowers!  My Lord resides in Tiruvan-Vandur where conches herald the day, My Krishna, the ancient Lord is swift.  Pray talk to him alone, worship his feet and tell him of my plight.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top