(3448)
அடியை மூன்றை யிரந்த வாறும் அங்கேநின்றாழ் கடலும் மண்ணும் விண்ணும்
முடிய, ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்,
நொடியு மாறவை கேட்குந் தோறுமென் நெஞ்சம் நின்தனக் கேக ரைந்துகும்,
கொடியவல் வினையேன் உன்னை யென்றுகொல் கூடுவதே?
பதவுரை
|
மூன்று அடியை இரந்த ஆறும் |
– |
(மாவலியிடத்தே) மூவடி நிலத்தை யாசித்தபடியும் |
|
அங்கு நின்றே |
– |
யாசித்த அவ்விடத்தில் நின்று கொண்டே |
|
ஆழ் கடலும் மண்ணும் விண்ணும் முடிய |
– |
ஆழ்ந்தகடல்களையும் மண் விண்ணுலகங்களையுமெல்லாம் |
|
ஈர் அடியால் |
– |
இரண்டடியாலே |
|
முடித்துக் கொண்ட முக்கியமும் அவை |
– |
ஆக்ரமித்துக்கொண்ட தனி வீரமுமாகிய அவற்றைக்குறித்து |
|
நொடியும் ஆறு கேட்கும்தோறும் |
– |
(ஞானிகள்) சொல்லுகிறபடியைக் கேட்கும் போதெல்லாம் |
|
என் நெஞ்சம் |
– |
எனது நெஞ்சு |
|
நின் தனக்கே |
– |
உன்திறத்திலேயே |
|
கரைந்து உகும் |
– |
சிதிலமாகாநின்றது; |
|
கொடிய வல்வினையேன் |
– |
மிகக்கொடிய பாபத்தைப் பண்ணின நான் |
|
உன்னை கூடுவது என்று கொல் |
– |
உன்னேடே கூடப்பெறுவது என்றைக்கோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (அடியை மூன்றை) மாவலி பக்கலிலே மாணுருவாய்ச்சென்று மூவடிநிலம் இரந்தபடியும், அந்நிலையில்நின்றே இரண்டியாலே மூவுலகையும் அகப்படுத்திக் கொண்டு நீ நினைத்தகாரியத்தை முடித்துக்கெக்ணட அதிசயமும் ஆகியவிவற்றைச் சொல்லக் கேட்குந்தோறும் என்னுடைய நெஞ்சு கரைந்து உருகின்றதே!; உன்னையநுஸத்தித்தால் இங்ஙனே சிதிலனாகும்படி மஹாபாபத்தைப் பண்ணின நான் தரித்து நின்று உன்னையறுபவிப்பது என்றைக்கோ?
நொடிதல் – சொல்லுதல்.
English Translation
Whenever I hear of how you begged for three strides of land then grew and took the Earth and sky and ocean in two strides and how you achieved your ends, my heart melts for you alone. O This wicked karmic self, when will I ever join you?
