(3436)

(3436)

நாள்தோறும் வீடின்றியே தொழக்கூடுங்கொல் நன்னுதலீர்,

ஆடுறு தீங்கரும்பும் விளைசெந்நெலு மாகியெங்கும்,

மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ்தண் திருவல்லவாழ்,

நீடுறை கின்றபிரான் நிலந்தாவிய நீள்கழலே?

 

பதவுரை

நல் நுதநீர்

அழகிய நெறியையுடைய தோழிகளே!

எங்கும்

எவ்விடத்திலும்

ஆடு உறு தீம் கரும்பும்

ஆலையிலிட்டு ஆடுதற்குரிய இனிமையான கரும்புகளும்

வினை செந்நெலும் ஆகி

முதிர விளைந்த செந்நெறி பயிர்களுமாய்

மாடு உறு பூ தடம் சேர்

பக்கங்களில் நெருங்கிய பூத்த தடாகங்களையுடைத்தாய்

வயல் சூழ்

கழனிகளாலே சூழப்பட்ட

தண் திருவல்லவாழ்

குளிர்ந்த திருவல்ல வாழிலே

நீடு உறைகின்ற பிரான்

நித்யவாஸம் செய்தருளா நின்ற எம்பெருமானுடைய

நிலம் தாவிய நீள் கழல்

பூமி முழுவதையு மொருகால் தளந்துகொண்ட நீண்ட திருவடிகளை

நாள்தோறும் வீடு இன்றியே

நாடோறும் விச்சேதமில்லாமல்

தொழ கூடும் கொல்

தொழ நேருமோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நாடொறும் வீடின்றியே.) இப்பாட்டில் கண்ணுதல் என்கிறவிளியின் கருத்தாவது- திருவள்ளவாழ் நாதனுக்கு நீங்கள் புருஷகாரம் பண்ணி அவன்  இங்கே யெழுந்தருளினால் அவன் திருவடிகளிலே தெண்டனிட்டு அதனால் நெற்றிக்கு அலங்காரமாகப்பெறும் ஸ்ரீபாத ரேணுவையுடையீர்களாக  உங்களைக் காண்பேனோ? என்பதாம். ஈட்டு ஸ்ரீஸூந்திய” அவன் வந்த வுபகாரத்துக்கு அவன் திருவடிகளிலே விழுந்து ப்ரணமபாம்ஸுக பரார்த்ய ஸலாடைகளாக உங்களைக் காணவல்லேனோ” என்பதாம்.

எப்போதும் பக்கபலமாய் அருகிலேயிருக்கிற பூத்த பொய்கைகளோடு சேர்ந்த வயல்சூழ்ந்த ச்ரமஹரமான திருவல்லவாழிலே அநுக்ரஹசீலனாய்க் கொண்டு நித்யவாஸம் பண்ணுகிற எம்பெருமானுடைய ஸெளசீல்யமே வடிவெடுத்த திருவடிகளை இடைவிடாதே தொழும்படியான பாக்கியம் நேருமோவென்கிறான்.

 

English Translation

O Radiant-forehead Sakhis!  The Lord who strode the Earth resides in Tiruvallaval amid marshy fields abounding in flowers where sugarcane sways sweetly and golden paddy ripens filling the Quarters.  Alas, when will worship his feet everyday without end?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top