(3392)
கையுள்நன் முகம்வைக்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர்,
மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,
செய்யதாமரைக் கண்ணு மல்குலும் சிற்றிடை யும்வடிவும்,
மொய்யநீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.
பதவுரை
|
நல் முகம் கையுள் வைக்கும் என்று |
– |
(இப்பெண் பிள்ளையானவள்) அழகிய முகத்தைக் கையிலே இட்டு வைக்கின்றாள்’ என்றும் |
|
நையும் என்று |
– |
நைகின்றாள் என்றும் சொல்லி. |
|
அல்குலும் |
– |
கடிப்ரதேசமும் |
|
சிறு இடையும் |
– |
சிறுசிறு இடையும் |
|
வடிவும் |
– |
திருமேனியும் |
|
மொய்ய நின் சூழல்தாழ்ந்த தோள்களும் |
– |
செறிந்து நீண்ட நேச பாசங்கள் தாழ்ந்துவரப்பெற்ற திருத்தோள்களும் |
|
அன்னையரும் |
– |
தாய்மாரான நீங்களும் |
|
முனிதிர் கை கொள் |
– |
சீறிப் பொடிகின்றீர்கள்; |
|
மை கோள் மாடத் திருக்குறங்குடி நம்பியை நான் கண்ட பின்-; |
||
|
செய்ய தாமரை கண்ணும் |
– |
செந்தாமரை போன்ற திருக்கண்களும் |
|
பாலியேன் முன் நிற்கும் |
– |
பாவியான என்னுடைய கண்முன்னே புலப்படா நின்றன. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (கையுள் கண் முகம்.) உலகத்தில் துக்கம் விஞ்சினால் முகத்தைக் கைத்தலத்திலே வைத்துக்கொண்டு சிந்தை கலங்கிக் கிடப்பதென்று ஒன்றுண்டு; அந்த நிலைமை பாராங்குசநாயகிக்கு முண்டாயிற்று; அங்ஙனே முகத்தைக் கையிலேயிட்டுக் கொண்டு நைந்து கிடந்தாள்; அதுகண்ட தாய்மார் ‘சாண் நீளச் சிறுக்கிக்கு இப்படியும் ஒரு இருப்புண்டோ?’ என்று முனிய, அதற்குத் தலைவி கூறுகின்றாள்;
திருக்குறுங்குடி நம்பியின் செந்தாமரைக் கண்ணும், அந்நோச்ருக்குத் தோற்றவர்கள் இளைப்பாறுமல்குலும் கீழையும் மேலையுங்கொண்டு அநுமித்து அறியவேண்டும்படியான இடையும், இவற்றுக்கு ஆச்ரயமான வடிவும், களிவண்டெங்குங் கலந்தாற்போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள்மேல் மிளிர நின்று* என்கிறபடியே திருதுழல்கள் அலைய நின்ற திருத்தோள்களும் என்முன்னே தோன்றா நின்றனவே! அவை அணைக்குமாறு கைக்கு எட்டாமையினாலே கையுள் முகம் வைத்து நையவேண்டியதாயிற்று, என் செய்வேனென்றோளாயிற்று.
மைகொள் மாடம் = உள்ளுள்ள எம்பெருமானுடைய நிழலீட்டாளே கருமைபூண்ட மாடங்களையுடையது திருக்குறுங்குடி.
English Translation
Ladies, you blame me saying, “She buries her face in her hands, she swoons”. Ever since I saw the Lord in Tirukkurungudi surrounded by fall houses, his red lotus eyes, hips, slender waist, face long dark tresses, and broad shoulders appear before my sinful self.
