(3387)
நின்றிடும் திசைக்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர்,
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்,
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும்சங்கமும்,
நின்று தோன்றிக் கண்ணுள்நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே.
பதவுரை
|
அன்னையரும் |
– |
தாய்மாரான நீங்களும் (என்னைப்பற்றி) |
|
நின்றிடும் என்று |
– |
இப்பெண் ஸ்தப்தையாய் நிற்கின்றாளென்று சொல்லியும் |
|
திசைக்கும் என்று |
– |
இப்பெண் அறிவழிந்து கிடக்கிறாளென்று சொல்லியும் |
|
நையும் என்று |
– |
இப்பெண் நைநின்றாளென்று சொல்லியும் |
|
முனிதிர் |
– |
வெறுத்துரைக்கின்றீர்கள்; |
|
குன்றம் மாடம் |
– |
குன்றம்போன்ற மாடங்கணிந்த |
|
திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-; |
||
|
வென்றி வில்லும் |
– |
ஜயசீலமான சார்ங்கமும் |
|
தண்டும் |
– |
லௌமோதகியென்கிற கதையும் |
|
வாளும் |
– |
நந்தாவாளும் |
|
சக்கரமும் சங்கும் |
– |
திருவாழி திருச்சங்குகளும் |
|
நின்று |
– |
நிரந்தரமாக நின்று |
|
கண்ணுள் தோன்றி |
– |
என் கண்ணுள்ளே காணப்பட்டு |
|
நீங்கா |
– |
நீங்குகின்றனவில்லை; |
|
நெஞ்சுள்ளும் |
– |
நெஞ்சினுள்ளும் |
|
நீங்கா |
– |
நீங்குகின்றனவில்லை. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (நின்றிடுந் திசைக்கும்.) நம்பியழகை நினைத்துச் சற்றுப்போது ஸ்தம்பித்து நிற்பது, பின்னை அறிவுகெட்டு அசேதநவஸ்துபோலே நிற்பது, உருகி நிற்பது இப்படியான நிலைமைகளைத் தலைமகள் அடைந்துவாரா நிற்க. தாய்மார் இதைச் சொல்லிச் சொல்லிப் பழிதூற்றத் தொடங்கினார்கள்; அதற்குத் தலைமகளுரைக்கின்றாள்; நான் ஒரு ஸ்யாபாராக்ஷமையன்றியே ஸ்தப்தையாய் நிற்பது வாஸ்தவம்; அறிவழிந்து நிற்பதும் வாஸ்தவம்; நைந்து கிடப்பதும் வாஸ்தவம்; இதற்காக நீங்கள் சீறுகைக்கு என்ன ப்ரஸக்தியுண்டு? குன்றம்போல் மணிமாடநீடு திருக்குறுங்குடி நம்பியை நான் ஸேவித்தது போல நீங்களும் ஸேவிக்கப்பெற்றாலன்றோ தெரியும். -***-வ்ருக்ஷே வ்ருக்ஷேச பச்யாமி சீரக்ருஷ்ணாஜிநாம்பரம் என்ற மாரிசனுடைய நிலைமையன்றோ எனக்குமாயிற்று. எம்பெருமானுடைய பஞ்சாயுதங்களேயன்றோ என்னைச் சூழ்ந்து கிடக்கின்றன. இந்த நிலைமை உங்களுக்கு உண்டானால் நீங்களும் நின்றிடுவீர், திசைப்பீர், ஸாவீர்; வீணாக என்னை எதுக்குப் பொடிகிறீர்கள்? என்றாளாயிற்று.
English Translation
Mother, you blame me saying, “She stands, she falters, she swoons”, Ever since I saw the Lord in fall-mansioned Tirukkurungudi, his victorious bow, mace, dagger, discus and conch appear before me everywhere, never leaving my eyes and heart.
