(3381)

(3381)

தெய்வங்காள். என்செய்கேன்?ஓரிர வேழ் ஊழியாய்,

மெய்வந்து நின்றென தாவி மெலிவிக்கும்

கைவந்த சக்கரதென் கண்ணனும் வாரானால்,

தைவந்த தண்தென்றல் வெஞ்சுடரில் தானடுமே.

 

பதவுரை

தெய்வங்காள்

தெய்வங்களே!

ஓர் இரவு

ஒரு இராப்பொழுதானது

ஏழி ஊழி ஆய்

ஏழு சல்பசாலமாய்க்கொண்டு

மெய்

மெய்யே

வந்து நின்று

முன்னே வந்து நின்று

என்ற ஆவி

என்னுடைய உயிரை

மெலிவிக்கும்

இளைக்கப்பண்ணா நின்றது;

கை வந்த சக்கரத்து

கையிலே  ஸஜ்ஜனாயிருக்கிற் திருவாழி யாழ்களையுடைய

என் கண்ணனும்

எனது கண்ணபிரானும்

வாரான்

வருகின்றிலன்

தைவந்த

தடவினால் போலிருக்கின்ற

தண் தென்றல்

குளிர்ந்த தென்றலானது

வெஞ்சுடரில் அடும்

வெள்ளிய நெருப்பிற் காட்டிலும் அதிகமாகச் சுடாநின்றது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (தெய்வங்காளென் செய்கேன்.) தென்றளோ நலியாகின்றது. கண்ணனோ வருகின்றிலன் , என் செய்வேனென்று மீண்டும் தெய்வங்களையே நோக்கி முறையிடுகின்றான்.

ஓரிரவு ஏழுழியாய் = ஸௌபரி போகத்துக்காகப் பல வடிவுகள் கொண்டாப்போல இரவு கலிவதற்காப் பல வடிவுகள் கொள்ளா நின்றதுபோலும். மெய் வந்து நின்ற எனதாவிமெலிவிக்கும்- இராவணன் இடம் பார்த்து வந்து நலிந்தாப்போலே இதுவும் விரஹதாசையறிந்துணந்து ஹிம்ஸிக்கின்றது. இவ்விடத்து ஈட்டில், “மோர்க் குழம்பு கொடுத்துத் தேற்றி விடுநகங் கட்டி நலிவாரைப்போலே” என்கிற ஸ்ரீஸூக்தியுள்ளது. முற்காலத்தில் பெருங்குற்றவாளர்களை முன்கோணங்கட்டியடிக்கும்போது அவர்கள் மிகவும் தணறிப்போனவாறே சிறிது ஸாத்மிக்கும்படி மோர்க்குழம்பு முதலியன கொடுத்துத் தேறுதலுண்டாக்கிப் பிறகு கிட்டிக்கோல் போட்டு ஹிம்ஸிப்பார்கள். அதைச் சொன்னபடி விடுநகர்- கிட்டிக்கோல்

கைவந்த- விநேயாமான என்றபடி. ஸதவந்து – தடவுகின்ற என்றபடி.

 

English Translation

Yea gods! A single night stretches into seven aeons, hanging over my person and thinning my soul, Alas! My Krishna-with-discuss does not come.  The cool spring-breeze scorches like fire; what shall I do?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top