(3375)

(3375)

ஆவிகாப் பாரினியார்? ஆழ்கடல்மண் விண்மூடி,

மாவிகார மாயோர் வல்லிரவாய் நீண்டதால்,

காவிசேர் வண்ணனென் கண்ணனும் வாரானால்,

பாவியேன் நெஞ்சமே! நீயும்பாங் கல்லையே?

 

பதவுரை

ஆழ் கடல்

ஆழ்ந்த கடலையும்

மண்

பூமியையும்

விண்

ஆகாசத்தையும்

மூடி

மறைத்து (இவ்வளவோடும் நில்லாமல் ஸகலலோகங்களையும் கபளீகரிக்கும்படி)

மா வீசாரம் ஆய்

பெரிய விகாரத்தையுடைந்தாய்கொண்டு

வல்

வலிதான

ஓர் இரவு ஆய்

ஒரே ராத்திரியாய்

நீண்டது

நெடுகிச் செல்லா நின்றது;

ஆல்

அந்தோ!

காவி சேர் கண்ணன்

நெய்தல் பூப்போன்ற நிறத்தையுடையனான

என் கண்ணனும்

எனக்குத் தஞ்சமான கண்ணபிரானும்

வாராவி

வந்து முகங்காட்டுகின்றிலன்

பாவியேன்

பாவியான என்னுடைய

நெஞ்சமே

மனமே!

நீயும்

நீ தானும்

பாங்கு அல்லை

அணுகூலமாக இருக்கிறாயில்லை.

இனி

இப்படியான பின்பு

ஆவி காப்பார்

பிராணனை ரக்ஷித்துத் தருவார்

ஆர்

யாவர்? (ஒருவருமில்லை.)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (ஆலிகாப்பார்) இந்நிலைமையிலே கண்ணபிரானும் வந்து உதவுகின்றிலனே! என்று இன்னாதாகிறான். ஆய்ச்சியரோடு குரவைகோத்தவன்று அந்தரஸம் ஸாத்மிக்கைக்காக நெடும்போது மறைந்து நின்று அவர்களுக்கு மிகவும் அலமாப்பை விளைத்து, பிள்ளை *** – தாஸாம் ஆவிரபூத்சௌரி: ஸ்மயமாநமுகாம்புஜ: பீதாம்பரதா: ஸ்ரக்வீ ஸாக்ஷார் மந்மதமந்மத: என்கிறபடியே புன்முறுவல் காட்டிவந்து புகுந்துநின்றாற்போலே நமக்கும் வந்து முகங்காட்டுவன் என்றிருந்தால் போதும்; வரவில்லையே யென்ற கதறுகின்றாள்.

இனி ஆலிகாப்பார் ஆழ் = *குளிரருவிவேங்கடத்து என் கோவிந்தன் குணம்பாடி, அளியத்த மேகங்காள்! ஆவிகாத்திருப்பேனே * என்று குணாஸந்தானம் பண்ணி ஆத்மநாரணம் பண்ணுவதென்று ஒன்றுண்டு; உசாத்துணையில்லாமையாலே அதற்கும் வழியில்லையாயிற்று. *காக்குமியல்வினன் கண்ணபெருமான் * என்று காப்பதே தொழிலான கண்ணபிரானும் உபேஷித்தான்; ஆகையாலே இனி ஆவிகாப்பாது எங்ஙனே?

(ஆழ்கடல் இத்யாதி.) கடலும் பூமியும் ஆகாசமும் எதுவும் தெரியாதபடி எல்லாவற்றையும் ஒன்றாக மறைத்துக் காளராத்திரியே நீண்டவளராநின்றது.

மாலீகாரமாய் என்றவிடத்து ஈட்டு ஸ்ரீஸூக்தி;- “பிள்ளையும்- அவ்வளவில் பர்யவஸிப்பதாயிருக்கிறதில்லை; மஹாவிகாரத்தை யுடைத்தாய் நித்யவிபூதியையும் கணிசிக்கிறாப்போலே யிரா நின்றது. ஸர்வரூப்யம் காட்டின ஸர்வசக்தி செய்வதெல்லாம் செய்யாநின்றது.”

ஓர் வல்லிரவாய் நீண்டது = இருளுக்கும் இரவுக்கும் வாசி தெரியவில்லைபோலும்;  இரண்டும் பர்யாய மென்றிருக்கிறாள்.

காவிசேர்வண்ணன் என் கண்ணனும்வாரானால் = *இந்தீவரதளச்யாமம் என்னும்படியான வடிவழகைக் காட்டுமளவே போதுமே; அது காட்டவும் வருகின்றிலன். வடமதுரையிலே வந்து தோன்றி உடனே மறைந்தாப்போலே மறைந்தானாகிலுமாம்; வருகைதானே அரிதாயிரா நின்றதே!

பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங்கல்லையே = இந்நிலைமையிலே நெஞ்சாவது ஸ்வாதீனமாக இருக்குமாகில் மறந்து பிழைக்கலாம். வேறு சிந்தனைகளைச் செய்து தரிக்கலாம்; அதற்கும் யோக்யதை இல்லாதபடி. “என்றெஞ்சினாருமங்கே யொழிந்தார்” என்கிறபடியே அத்தலைபற்றி இத்தலையை வெறுத்தொழிந்ததேயென்கிறாள்.

 

English Translation

A ghastly pall engulfs the Earth, sea and sky, stretching into one sinister night.  My golden hued Krishna does not come, alas! O sinful heart, you too are not with me; who can save me now?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top