(3370)

(3370)

பேய்முலை யுண்டு சகடம் பாய்ந்து மருதிடைப்

போய்முதல் சாய்த்து, புள்வாய் பிளந்து களிறட்ட,

தூமுறு வல்தொண்டை, வாய்ப்பிரானையெந் நாள்கொலோ,

யாமுறு கின்றது தோழீ! அன்னையர் நாணவே?

 

பதவுரை

தோழீ

தோழியே!

பேண் முலை உண்டு

பூதனையின் முலையைப் புசித்து

சாடல் பாய்ந்து

சகடத்தை முறித்துத் தள்ளி

மருது இடைபோய்

இரட்டை மருதமரங்களிளிடையே தவழ்ந்து சென்று

முதல் சாய்த்து

(அற்றை) வேரோடே தள்ளி

புள்வாய் பிளந்து

பகாசுரனுடைய வாயைக் கிழித்து

களிறு அட்ட

குவளையபீட யானையைக் கொன்று முடித்த

தூ முறுவல் தொண்டை வாய்பிரானை

பரிசுத்தமான மந்தஹாஸத்தையும் கொங்கைக் களிபோனற் திருபப்பவளத்தையுமுடைய பெருமானை

அன்னையர் நாண

தாய்மார் தலைதொங்கும்படியாக

உரம் உறுகின்றது

நாம் கிட்டுவது

ஏ நான் கொலோ

என்றைக்கோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (பேய் முலையுண்டு.) மஹோபகார சீலனான எம்பெருமானை குணஹீகன் என்று குறைகூறின தாய்மார் ‘அந்தோ! இப்பெருமாளையோ நாம் குணஹீகனென்று குறைகூறின தாய்மார் “அந்தோ! இப்பெருமானையோ நாம் குணஹீகனென்று சொன்னது!” என்று வெட்கப்பட்டுக் களிழ்தலையிடும்படி நாம் அப்பெருமானைக் காண்பது என்றைக்கோ? என்கிறாள்.

எம்பெருமானுக்குப் பரோபகார சீலத்வம் நேற்று இன்றைக்கு வந்ததன்றே, ஜன்மஸித்தமாயிற்றேயென்று நிரூபிக்கிறான் பேய்முலையுண்டு இத்யாதியால். பூதனையால் வந்த ஆபத்தைப்போக்கி, சகடத்தினால் வந்த அனர்த்தத்தைத் தவிர்த்து, இரண்டை மருதமரங்களால் வந்த தீமையைத் தொலைத்து, பகாஸுரனால் வந்த வாதையை நீக்கி, குவலயாபீட யானையினால் நேர்ந்த விபத்தையும் தெலைந்து இப்படி ஆச்ரித விரோதி நிரஸாம் பண்ணி உபகரிக்கப் பெற்றோமே! என்று தூமுறுவல் செய்துநிற்கும் பெருமானை நம் தாய்மார் கண்டால் ‘இவனிடத்திலோ நாம் குணஹாநி சொன்னது’ என்று நாணிக்கவிழ்ந்திருப்பார்களே; அன்னவனை நாம்கிட்டுவது எந்நாள்கொலோ! என்றாளாயிற்று.

ஈட்டுஸ்ரீஸூக்தி:- “இப்போது அவனை ஸ்பர்சித்து நம் ப்ரயோஜநம் பெற ஆசைப்படுகிறோமல்லோம்; (அன்னையர் நாணவே) ‘பிரிந்த வனந்தாம் அவன் தானே வருமளவும் ஆறியிருந்திலன், அவன் தானும் வரவு தாழ்ந்தான்’ என்று இரண்டு தலைக்கும் பழி சொல்லுகிற தாய்மார் முன்பே, ‘நாம் இத்தனை மடலெடுக்குமளவாம்படி பிற்பாடரானோமாகாதே’ என்று ஹ்ரீரேஷாஹி மமாதுலா* என்கிறபடியே அவன் லஜ்ஜித்து வந்து நிற்கிறபடியைக் கண்டு ‘இவனையோ நாம் இவ்வார்த்தை சொல்லிற்று!’ என்று அவர்கள் லஜ்ஜித்துக் கவிழ்தலையிடும்படியாக.”

 

English Translation

The Lord drank the ogress’ breasts, smote the cart, went between the Marudu trees, ripped the bird’s beak, and killed the rutted elephant.  He has a pearly smile and coral lips. O, when will we reach him and put these ladies to shame?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top