(3368)

(3368)

என்னையென் செய்யிலென் ஊரென் சொல்லிலென் தோழிமீர்,

என்னை யினியுமக் காசை யில்லை யகப்பட்டேன்,

முன்னை யமரர் முதல்வன் வண்துவ ராபதி

மன்னன், மணிவண் ணன்வாசு தேவன் வலையுளே.

 

பதவுரை

தோழிமீர்

தோழிமார்களே!

முன்னை அமரர் முதல்வர்

நித்ய ஸூரிநாதனும்

வண் துவராபதி மன்னன்

அழகிய த்வாரகாபுரிக்கு அரசனும்

மணிவண்ணன்

நீலமணிவண்ணனுமான

வாசுதேவன்

கண்ணபிரானாகிற

வலையுள்

வலையினுள்ளே

அகப்பட்டேன்

சிக்கிக் கொண்டேன்;

இனி

ஆன பின்பு

என்னை

என் திறத்திலே

உமக்கு ஆசை இல்லை

நீங்கள் ஆசைவைக்க நியாயமில்லை;

அன்னை என் செய்யில்

தாய் எது செய்தால்தான் என்ன?

என் ஊர் என் சொல்லில்

என் ஊரார் எதுசொன்னால்தான் என்ன?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (அன்னை யென்செய்யிலேன்?) நீ இங்ஙனே துணிவு கொண்டால் தாயார் ஜீவிக்கமாட்டாள்; அத்தாலே ஊராருடைய பழிப்பும் மிகும் என்று தோழி சொல்ல, கண்ணபிரானுடைய குணசேஷ்டிதங்களில் நான் அகப்பட்டேன். இனி யார்  என் செய்தாலென்ன என்கிறாள்.

அன்னை என்செய்யில் ஏன்? = “தாயார் பொருள், தாயார் பொறாள்’ என்று தோழி அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாள்; தலைவி அவளை நோக்கி ‘தாயார் பொறாமல் என்ன செய்துவிடுவள்’ என்று கேட்டாள்; ‘உயிர் மாய்ந்து போவள்’ என்று தோழி விடை கூறினாள். அதற்குத் தலைவி சொல்லும் விடை இது, ‘தாயார் ஜீவித்தாலென்ன? முடிந்தாலென்ன?’ என்றவாறு.

‘தாயார் முடிவதையும் கணிசியாமல் இவள் நாயகனுடைய வடிவழகிலேயீடுபட்டாள்’ என்று ஊரார் பழி சொல்லுவர்களே! என்ன; ஊரென் சொல்லேன்? என்கிறாள்.

இப்படி உதறிச் சொல்லுகைக்குக் காரணம் என்ன? என்றுகேட்க; முள்ளையமார் முதல்வன் வண்துவராபதி மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுள் அகப்பட்டேன், (ஆகையாலே) என்னை (ப் பற்றி) இனி உமக்கு ஆசையில்லையென்கிறாள்.

“வாசுதேவன் வலையுளே அகப்பட்டேன்” என்றது- வாசுதேவனாகிற வலையிலேயகப்பட்டேன் என்றும், வாசுதேவனுடைய வலையிலே யகப்பட்டேன் என்றும் பொருள் பெறும். வலையாவது தன் பக்கலில் அகப்பட்டாரை வேறு இடத்திற்குப் போகவொட்டாமல் செய்வதாதலால் எம்பெருமானை வலையாகக் கூறுதல் பொருந்தும். “பாலாலிலையில் துயில் கொண்டபரமன் வலைப்பட்டிருந்தேனை” என்றாள் ஆண்டாளும். எம்பெருமானுடைய வலை என்று பொருள் கொள்ளும்போது திருக்கண்களை வலையாகக் கொள்ளலாம். “உசுவையால் நெஞ்சமுள்ளுருகி உன் தாமரைத்தடங்கள் விழிகளின் அகவலøப்படுப்பாள்” என்பர் மேலே.

இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்; “ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் வலையாக அபிநயித்துப் பாடாநிற்க, திருக்கண்களைக் காட்டியருளினாரெம்பெருமானார். ‘கார்த்தண் கமலக்கண்ணென்னும் நெஞ்கயிறு’ என்னக்கடவதிறே. அநுகூலம் போலேயிருந்து தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன்.”

 

English Translation

Sister!  Whatever Mother may do, whatever the world may say, henceforth expect no love from me.  For, I am caught in the drag-net of my gem-hued Lord Vasudeva.  King of Dvaraka, the ancient Lord of celestials.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top