(3348)
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும்,
மாலார் வந்தினநாள் அடியேன்மனத்தே மன்னினார்,
சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும்,
மேலாத் தாய்தந்தையும் அவரேயினி யாவாரே.
பதவுரை
|
மேல் ஆம் தேவர்களும் |
– |
மிகச்சிறந்தவர்களான நித்யஸூரிகளும் |
|
நிலத் தேவர்களும் |
– |
இவ்வுலகத்திலுள்ள பக்தர்களும் |
|
மேவி தொழும் |
– |
விரும்பி வணங்கிநின்ற |
|
மானார் |
– |
எம்பெருமான் |
|
நினநாள் |
– |
இப்போதும் |
|
வந்து |
– |
என்பக்கலிலே ஆமிழுக்கியம் பணிவந்து |
|
அடியேன் மனத்தே |
– |
எனது நெஞ்சினுள்ளே |
|
மன்னினார் |
– |
பெருந்தினார்; |
|
இனி |
– |
இது முதலாக |
|
சேல் எய் கண்ணியரும் |
– |
மீனோக்குடைய மாதர்களும் |
|
பெரு செல்வமும் |
– |
மஹத்தான ஜச்சரியமும் |
|
நல் மக்களும் |
– |
குணம்மிக்க பிள்ளைகளும் |
|
மேல் ஆம் தாய் தந்தையும் |
– |
மேம்பட்ட மாதாபிதாக்களும் |
|
அவரே ஆவார் |
– |
(எனக்கு) அப்பெருமானேயாவர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- [மேலாத் தேவர்களும்] எம்பெருமான் தன்னை ஆதரிப்பாரில்லாமே என்னை விஷயீகரித்தானல்லன்; பரம விலக்ஷணரானவர்கள் தன்னை அநுபவியா நிற்கச் செய்தேயும் அவர்களிடத்திற் காட்டில் அதிகமான விருப்பத்தை என் பக்கலிலே பண்ணி வந்து என்னுள்ளே புகுந்தானாகையால் அவனையே நான் ஸகலவித போக்யவஸ்துவாகவும் கொண்டேனென்கிறார்.
மேனாத் தேவர்களென்றது- சுவர்க்கத்திலுள்ள தேவர்களினும் மேம்பட்டவர்களான நித்யஸூரிகளென்றபடி. நிலத்தேவர்-பிராமணர்கள். *** என்பது வடமொழி வழக்கு. ஸ்ரீ வைஷ்ணவர்களை விவக்ஷிப்பதாக்க் கொள்க. “மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழும்” என்ற சொற்சேர்க்கையை நோக்கி நம்பிள்ளையருளிச் செய்யும்படி;- “இளையபெருமாளும் இடக்கை வலக்கையறியாத குரங்குகளும் ஒக்கவடிமை செய்தாப்போலே இரண்டு விபூதியிலுள்ளாரும் ஒருமிடறாகச் சேர்ந்து அடிமை செய்யும் ஸர்வாதிகனானவன்.” என்று இப்படிப்பட்ட எம்பெருமான் “மாகடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான்” என்கிறபடியே திருப்பாற்கடலையும் பெரிய பிராட்டியார் திருமுலைத்தடத்தையும் விட்டு இங்கேவந்து நித்யஸம்ஸாரியான என்னெஞ்சிலே ஸ்தாவரப்ரதிஷ்டையாக இருந்தனன்.
[சேலேய் கன்ணியரும் இத்யாதி.] பெருமானைப் பின் தொடர்ந்த இளைய பெருமாள் *** – ப்ராதாபர்த்தா ச பந்துச் ச பிதா ச ம்ம ராகவ:” என்று பெருமாளையே எல்லாவுறவுமுறையாகக் கொண்டிருந்த்துபோல, நானும் அப்பெருமாளையே ஸகலவித பந்துவர்க்கமுமாக்க் கொள்ளாநின்றேனென்கிறார். சேல்ஏய் கண்ணியர்-சேல் என்று மீனுக்குப் பெயர்; மீன் போன்ற கண்களையுடையவர்களென்று ஸ்த்ரீகளைச் சொல்லுகிறது. உலகத்தார் ஒவ்வொரு வஸ்துவைப்பற்றி நின்று ஒவ்வொரு இன்பம் அடைவர்கள்; நான் எம்பெருமானொருவனையே பற்றிநின்று எல்லாவகையான இன்பங்களையும் பெற்றேனாகிறேன் என்றதாயிற்று.
English Translation
the Lord worshipped by celestials and monarchs has come this day and occupied my lowly heart. Henceforth he is my Mother, my father, my Children, my wealth, my fish-eyed women and all else.
